Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓரே வீட்டில் வாக்கு சேகரித்த பொன்முடி - செல்லூர் ராஜூ.. அனல் பறக்கும் களத்தில் நடந்த 'கூல்' நிகழ்வு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் பொன்முடியும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தங்கள் கட்சிகளுக்குக்காக ஒரே வீட்டில் வாக்கு சேகரித்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் பொன்முடியும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தங்கள் கட்சிகளுக்குக்காக ஒரே வீட்டில் வாக்கு சேகரித்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது. அரசியலில் எதிரெதிர் துருவங்களை சேர்ந்த இரு கட்சியினரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாக்கு சேகரித்து கலகலப்பாக பேசிக்கொண்டது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறர். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

தீவிர வாக்குசேகரிப்பு

தீவிர வாக்குசேகரிப்பு

தேர்தலுக்கு இன்னும் சரியாக 4 நாட்களே உள்ளது. இதனால், தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு வீச்சில்..

முழு வீச்சில்..

இதற்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், பொன்முடி என 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அதிமுகவும் இந்த தேர்தலில் வென்று காட்ட வேண்டும் என்று முழு வீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது.

பொன்முடி - செல்லூர் ராஜூ

பொன்முடி - செல்லூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ளனர். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திருவிழா போல காட்சியளிக்கிறது என்று சொல்லும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் வாக்கு சேகரிப்பும் அரசியல் கட்சியினர் நடமாட்டமுமாக இருக்கிறது. இந்த நிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட ஒரு பகுதியில் அமைச்சர் பொன்முடி திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்தார். அதேபோல், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே பகுதியில் வாக்கு சேகரித்து வந்தார்.

ஜாலியாக பேசிக்கொண்டனர்

ஜாலியாக பேசிக்கொண்டனர்

ஒரு கட்டத்தில் செல்லூர் ராஜூ வாக்கு கேட்டுக் கொண்டு இருந்த வீட்டிற்கு அமைச்சர் பொன்முடியும் வருகை தந்தார். அப்போது இருவரும் ஒருவரை பார்த்து பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொண்டனர். அதோடு செல்லூர் ராஜுவை செல்லமாக தட்டி பொன்முடி சிரித்தபடி பேசிக்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு கட்சி நிர்வாகிகளும் சிரித்துக் கொண்டனர். அனல் பறக்கும் தேர்தல் களத்திற்கு மத்தியிலும் எதிர் எதிர் துருவங்களாக உள்ள திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் சந்தித்து ஜாலியாக பேசிக்கொண்டது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே..

ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே..

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பும் செல்லூர் ராஜூவும் பொன்முடியும் எதிர் எதிரே சந்திக்கொண்டனர். வாக்கு கேட்ட படி நடந்து வந்த செல்லூர் ராஜூ, எதிரே காரில் வந்த பொன்முடியை பார்த்ததும் வணக்கம் செலுத்தி விட்டு.. ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே.." என்று கூறினார். இதற்கு சிரித்துக் கொண்டே அமைச்சர் பொன்முடியும் வணக்கம் வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+