சத்தியமங்கலத்தில் கேட்கும் அழுகுரல்.. குட்டியின் 2 மாத பாசப் போராட்டம் போச்சே! உயிரிழந்தது தாய் யானை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் அந்த யானை தற்போது இறந்து விட்டது. இது வனத்துறையினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் புலி, யானை. சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோயில் அருகே நேற்று முன் தினம் இரவு குட்டி யானையுடன் தாய் யானை ஒன்று வந்தது.

அந்த தாய் யானைக்கு உடல்நலம் சரியில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வனத்திலேயே மயங்கி விழுந்தது. இதை பார்த்த பிறந்து 60 நாட்களே ஆன குட்டி யானை, தாய் யானையை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர். அது போல் கால்நடை மருத்துவ குழுவினரும் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். 40 வயதாகும் அந்த யானைக்கு வயது மூப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் அந்த யானையால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. தாய்க்கு சிகிச்சை அளித்த போது குட்டி யானை பிளிறியபடி சுற்றி வந்தது காண்போரை கலங்கச் செய்தது. பண்ணாரி சாலையின் அருகே இந்த சம்பவம் நடந்த நிலையில் குட்டி யானை சாலை பகுதிக்குச் சென்று வாகனத்தில் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் குழிதோண்டி அந்த குட்டி யானையை இறக்கி பாதுகாத்து வந்தனர்.

அது போல் தாய்க்கு சிகிச்சை அளித்து கொண்டே குட்டி யானைக்கு பால், நீர் ஆகியவற்றை வனத்துறையினர் வழங்கி வனஅதனர். இஅந்த நிலையில் தன்னை தாயுடன் இருக்க விடாமல் குழியில் வைத்துள்ளார்களே என அந்த குட்டி யானை பாச போராட்டம் நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்த தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில் தாய் யானை இறந்துவிட்டது. அனுபவம் வாய்ந்த 4 கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அதன் உயிரை காக்க அத்தனை முயற்சிகள் எடுத்தும் கடைசியில் அது பலனளிக்கவில்லை.
எங்கள் மனம் வேதனையடைந்துள்ளது. ஆனால் அந்த 60 நாட்களேயான குட்டியுடன் அந்த தாய் யானை ஏதோ அதிசயத்தை நடத்தியிருந்துள்ளது. அதனால்தான் அந்த குட்டி, தாயையே சுற்றி சுற்றி வந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications