Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் பொங்கிய கி. வீரமணி.. பூண்டு, வெங்காயம் இல்லாமல் சைவ உணவு? சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும், பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கு, திராவிட கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில், சுப்ரீம் கோர்ட் கேண்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பூண்டு, வெங்காயம் கலந்த உணவு கூட வழங்கப்பட வேண்டாம் என வாய்மொழியாக கேண்டீன் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

erode k veeramani

அதிர்ச்சி உத்தரவு: இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் சங்கத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தனர்.. அதில் "அசைவ உணவு வழங்கக் கூடாது என வாய்மொழி வழியாக உத்தரவிட்டு கட்டுப்பாடு விதித்தது அநீதி..

ஒரு சிலரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி உணவுடன் வழக்கமான உணவையும் தொடர்ந்து வழங்க வேண்டும். இப்படியான கட்டுப்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் .. ஒரு சிலருக்காக கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது" என்று வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் எழுதியிருந்தனர்.

கடும் கண்டனம்: இந்த விவகாரத்துக்கு, திராவிடர் கழகமும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. அத்துடன், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று, திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில், தீர்மானத்தையும் இயற்றியிருக்கிறது.

திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம், மூத்த தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் திடலில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவைகள்தான்:

மாற்றங்கள்: தமிழின சமுதாயத்தில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும், வெற்றியையும் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 26-ந்தேதி அன்று ஈரோட்டில் சிறப்புடன் நடத்துவது.

தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இப்பிரச்சனைக்குச் சட்ட ரீதியான முடிவினை ஏற்படுத்திட, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி, உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கை: 'புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்' எனத் தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வரும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.

'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஒன்றிய அரசு திணிக்கும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. ஒன்றியத்தில் ஆளும் மைனாரிட்டி பா.ஜ.க. அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த ஒன்றிய அரசு சுற்றறிக்கை விடுத்து உள்ளது.

விவாதப்போட்டி: அதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டு உள்ள "ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத்" ஆகிய தலைப்புகள் சர்ச்சைக்குரியவை. மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மாணவர் விரோதப் போக்காகும், வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்த முடிவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை திராவிடர் கழக தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

உணவகம்: 'நவராத்திரி விழா' என்கிற பெயரில் ஒன்பது நாட்களுக்கு உச்சநீதிமன்ற உணவகத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும், அது மட்டுமின்றி பூண்டு, வெங்காயம் இல்லாத உணவு மட்டுமே வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற உணவகத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தவறான முன்னுதாரணமாகி விடும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்குரைஞர்களின் கருத்துக்கு உரிய மதிப்பு அளித்து, உணவு கட்டுப்பாடு விதிக்கும் செயலை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நவராத்திரி பண்டிகையை ஒட்டி காலம் காலமாக விரதம் கடைப்பிடித்து வருகிறார்கள்.. வழக்கமாக, 9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். எனவேதான் இது தவறான முன்னுதாரணம் என்று வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+