அருந்ததியினர் சமூகத்தை அவதூறாக பேசவில்லை.. வரலாற்றை தான் சீமான் பேசினார்.. நாதக மேனகா சொன்ன விளக்கம்
அருந்ததியினர் சமூகத்தை சீமான் அவதூறாக பேசவில்லை என்று மேனகா விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு: அருந்ததியினர் சமூகத்தை பற்றி சீமான் அவதூறாக பேசவில்லை என்று அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கமளித்துள்ள மேனகா, சீமான் பேசிய கருத்துக்கு வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் அருந்ததியர் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அருந்ததியினர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் அலுவலர் நோட்டீஸ்
இதனைத் தொடர்ந்து அருந்ததியினர் சமுதாயத்தைச் மக்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் நோட்டீஸ் அனுப்பினார்.

சீமான் பேசியது என்ன?
சீமான் பிரச்சாரத்தில் பேசுகையில், விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள் என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகம் செங்குந்த முதலியார்கள். நாம் தமிழர் வேட்பாளரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான்.

சீமானின் சர்ச்சை
அதே போல், கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள் என்று தெரிவித்தார்.

வரலாற்று ஆதாரங்கள்
இந்த நிலையில் தேர்தல் அலுவலர் நடத்தும் அலுவலர் அனுப்பிய நோட்டீஸிற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அருந்ததியினர் சமூகத்தை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசவில்லை. வரலாற்று தொடர்பான கருத்துகளையே சீமான் பிரச்சாரத்தின் போது பேசினார். சீமான் பேசிய கருத்துக்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications