எல்லாம் ஓவர்.. இனி ஓபிஎஸ் பெட்டிஷன் கூட போட முடியாதாம்.. இத கவனிச்சீங்களா? ‘மாஜி’ சொன்ன மேட்டர்!
ஓபிஎஸ் அணியினர் 2 வாய்ப்புகளை நம்பி இருக்கும் சூழலில், அதற்கு இனி வேலையே இல்லை என்று கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார் விஜயபாஸ்கர்.
ஈரோடு : கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில், ஓபிஎஸ் நீக்கமும் செல்லும் எனவே, அவர் கட்சியிலேயே இல்லை என்பதால் வழக்கு தொடர முடியாது எனக் கூறியுள்ளார் விஜயபாஸ்கர்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட நகர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சிவில் வழக்கு
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டதோடு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, சிவில் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் முறையிடலாம் என்று கூறியிருக்கிறது. தற்போதைய நிலையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கையே தங்களது கடைசி ஆயுதமாக நம்பி இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

தேர்தல் ஆணையம்
ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் விதிமுறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதை மீறி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டுகிறார். அது விதிமுறைகளுக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட பிரதான வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. எனவே, அந்த வழக்கின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்க்கிறார். அடுத்ததாக தேர்தல் ஆணையத்தையும் அணுக முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

முற்றுப்புள்ளி
இந்நிலையில், கட்சியில் உறுப்பினர்கள் இல்லாத யாருமே சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது என அதிமுக ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகர் அதிமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "இனி அணியும் இல்லை, பிளவும் இல்லை, பிரிவும் இல்லை. இந்த டீம் அந்த டீம் என்பதும் இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுக மற்றும் இரட்டை இலை என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா அதற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி என்ற வரிசையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

பெட்டிஷனே போட முடியாது
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அன்றைய தினம், நீக்கப்பட்டவர்கள் யாருக்கும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற உரிமை கூட கிடையாது. கட்சியில் உறுப்பினர்கள் இல்லாத யாருமே சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது. இந்த புரிதல் அனைவருக்குமே இருக்கின்றது. இனி அது ஒரு இறந்த காலம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications