Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு: முதலியார் சமூக வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியா? களத்தில் இருந்து நேரடி தகவல்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி ஜாதிய கால்குலேஷன்களின் பின்னணி குறித்து பேசுகிறது இந்த செய்தி.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு கிழக்கு: முதலியார் சமூக வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியா? களத்தில் இருந்து நேரடி தகவல்கள்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்குந்த முதலியார் ஜாதி வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பது பொதுவாக சொல்லப்படும் தகவல். ஆகையால் செங்குந்த முதலியார் ஜாதிய வாக்குகளை அறுவடை செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் வாழ்வா? சாவா? என்கிற தோரணையில் திமுக- அதிமுக அணிகள் மோதுகின்றன.

Senguntha Mudaliyar Caste votes to decide in Erode East By-Election ?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே இத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியவர்களாக செங்குந்த முதலியார் ஜாதியினர்தான் இருக்கின்றனர் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அத்துடன் மூத்த அமைச்சர்கள் குழு ஒன்றும் செங்குந்த முதலியார் ஜாதி சங்க நிர்வாகிகளை சந்தித்தனர். பின்னர் ஊடகங்களில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை செங்குந்த முதலியார் சங்கம் ஆதரிக்கும் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்த ஜாதிய கால்குலேஷன்கள் தொடர்பாக நாம் களத்தில் இருக்கும் சீனியர் செய்தியாளர்களிடம் பேசினோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பெரும்பான்மையினர் என சொல்வதற்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை. பொதுவாக கொங்கு வேளாள கவுண்டர்கள், செங்குந்த முதலியார் ஜாதியினர் கணிசமாக உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினராக மட்டுமே இருந்தது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சந்திரகுமார் வெற்றி பெற்றார். அவர் செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிமுகவின் வாக்குகளால்தான் வென்றார். ஜாதிய வாக்குகள் அவருக்கு பக்க பலமா, மொத்தமாக கிடைத்தது இல்லை. அதனால்தான் இந்த தேர்தலில் கூட பத்தோடு பதினொன்றாகவே திமுக நிர்வாகிகளுடன் வலம் வருகிறார் சந்திரகுமார். அப்படி முதலியார் ஜாதி வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருந்தால் சந்திரகுமாருக்கு முன்னுரிமைதானே கிடைத்திருக்க வேண்டும்.. அப்படி எல்லாம் எதுவும் சந்திரகுமாருக்கு தரப்படவில்லை. அவரும் தேர்தல் பணி செய்கிறார்; அவரும் அமைச்சர் முத்துசாமிக்கு பின்னால் வரும் கூட்டத்தில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த தென்னரசும் செங்குந்த முதலியார் ஜாதி கிடையாது. கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர் தென்னரசு. அவரையே இம்முறை அதிமுகவும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த திருமகன் ஈவெராவும் செங்குந்த முதலியார் ஜாதி கிடையாது. நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்போது திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக கூட்டணி வேட்பாளர். தேமுதிகவின் ஆனந்த், கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மட்டுமே செங்குந்த முதலியார் ஜாதியை சேர்ந்தவர்.

Senguntha Mudaliyar Caste votes to decide in Erode East By-Election ?

மேலும் செங்குந்த முதலியார் ஜாதி வாக்குகள், அந்த ஜாதி சங்கம் சொன்னபடியே ஒரு கட்சிக்கோ வாக்காளருக்கோ சிந்தாமல் சிதறாமல் செல்லக் கூடிய அளவுக்கு வலிமையானதும் இல்லையாம். அனைத்து கட்சிகளிலும் அந்த சமூகத்தினர் இருக்கத்தான் செய்கின்றனர். அதனால் செங்குந்த முதலியார் ஜாதிய வாக்குகளை முன்வைத்து பேசப்படுகிற கால்குலேஷன்கள் கற்பிதம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

உதாரணமாக, வேடசந்தூர் சட்டசபை தொகுதியை எடுத்துக் கொண்டால் வேட்பாளராக ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவரையே பிரதான கட்சிகள் நிறுத்துவது வழக்கம். அவர்களில் ஒருவர் வெல்வதும் தொடருகிறது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேறு ஜாதியை சேர்ந்தவர் ஜெயித்திருக்கலாம். ஆனால் பொதுவாக வேடசந்தூர் தொகுதியில் ஒக்கலிகா ஜாதியினர் தீர்மானிக்கிற சக்திகள் என சொல்லப்படுவது யதார்த்தமான உண்மை. அப்படியான ஒரு நிலைமை ஈரோடு கிழக்கில் இல்லை எனவும் அவர்கள் விவரிக்கின்றனர்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இம்முறை வாக்குப் பதிவு எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகவே இருக்கும். அதனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சில ஆயிரம் ஓட்டுகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூடுதலாக பெறுவார்; அதற்காக செங்குந்த முதலியார் ஜாதி ஓட்டுகள் அவருக்கு கிடைத்துவிட்டன எனவும் கருதிவிடக் கூடாது; வாக்குப் பதிவு கூடுதலால் அவருக்கு சில ஆயிரங்கள் கூடுதலாக கிடைக்கும் என முன்னெச்சரிக்கையாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுதான் கள நிலவரமாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+