விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு!
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக ஈரோட்டில் தவெகவை சேர்ந்த பெண்கள் 150 பால்குடங்கள் எடுத்து பேரணியாக வந்து மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக, கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு தருவோம் என ஆஃபர் கொடுத்தது. ஆனால், எந்தவொரு கட்சியும் தவெக உடன் கூட்டணிக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை தவெக தனித்தே நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டுமென அவர்களது கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அம்மனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாலி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டும் என சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் 150 பால்குடங்களை எடுத்து பேரணியாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தி நடைபெறவிருக்கும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக வேண்டுமென வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் விஜய் பாலாஜி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!












Click it and Unblock the Notifications