Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் சிஎம் ஆகனும் சார்.. ஆனால் ஆட்சிக்கு வந்து என்ன செய்யனும்னு தெரியாது.. கள ரிப்போர்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், கரூர் நிகழ்வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதல் பெரிய பொதுக்கூட்டத்தை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடத்தினார். காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்த இந்த மக்கள் சந்திப்பில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.போலீசார் விதித்த 84 நிபந்தனைகளுடன் அனுமதி பெறப்பட்ட இக்கூட்டத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நான்கு அடுக்கு தடுப்புகள், 72 பிரிவுகள், 1,797 போலீசார் உள்ளிட்ட ஏற்பாடுகள் இருந்தன. விஜய் தனது பிரசார வாகனத்தின் மேலிருந்து உரையாற்றினார். மேடை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vijay tvk

கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், குறிப்பாக பெண்கள் பெருமளவில் கொடியசைத்து உற்சாகம் காட்டினர். வீடியோ காட்சிகளில் தெரிவது போல, பெரும் கூட்டம் விஜயை வரவேற்க திரண்டிருந்தது.

ஒன்இந்தியாதமிழ் சார்பிலும், பிடிஐ செய்தி நிறுவனம் சார்பிலும் கூட்டத்தில் பங்கேற்ற வந்தவர்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கருத்து கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை, ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாததை விஜய் செய்வார் என்று பொத்தாம்பொதுவாக கூறினர், எதை செய்யவில்லை, எதில்தான் தமிழகம் பின்தங்கிவிட்டது, அதை விஜய் எப்படிச் செய்வார் என்ற எந்த விவரத்தையும் சொல்ல தொண்டர்களுக்கு தெரியவில்லை. இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நீங்கள் அதை முழுமையாக பார்க்கலாம்.

விஜயின் உரையில் முக்கிய அம்சங்கள்:

  • திமுகவை கடுமையாக விமர்சனம்: "திமுக ஒரு தீய சக்தி. திமுகவும் பிரச்சினைகளும் ஒன்றாகவே வருகின்றன. விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அத்திகடவு-அவினாசி திட்டத்தை மட்டும் போட்டோ எடுப்பதற்காக பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார்.
  • தவெகவை புகழ்ந்து: "தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தியான திமுகவை வீழ்த்துவோம்" என உறுதியளித்தார்.
  • அண்ணா, எம்ஜிஆர் பற்றி: "அண்ணா, எம்ஜிஆர் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை நாங்கள் சொந்தம் கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது" என்றார். "33 ஆண்டுகளாக கட்டியெழுப்பிய மக்கள் நம்பிக்கையை அழிக்க முயல்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்" என உற்சாகமாக பேசினார். "களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது. களத்தில் இருப்பவர்களுடன் தான் போட்டி" என்று சாடினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொங்கு மண்டலத்தில் தவெகவின் வலிமையை நிரூபிக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்தது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கொடியசைத்து வரவேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+