சிக்னலை கவனிச்சீங்களா? விட்டு பிடிக்கலாம்! "வெள்ளி" முளைக்க காத்திருக்கும் ஓபிஎஸ்! இப்படி ஒரு பிளானா
ஈரோடு கிழக்கில் ஓ பன்னீர்செல்வத்தை இருள் சூழ்ந்தாலும் பொதுக்குழு வழக்கில் வெள்ளி முளைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு தற்போது தேர்தல் களத்தில் இல்லாமல் போனாலும்.. அவர்கள் தரப்பில் நிர்வாகிகள் பெரிய வருத்தம் இன்றி இருக்கிறார்களாம். முக்கியமாக ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.. இதற்கு காரணம் ஒன்றும் இருக்கிறது!
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
தாக்கல் செய்ததோடு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

உத்தரவு
கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது.

டெல்லி
அதன்படியே பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக வேட்பாளரை தேர்வு செய்ய வாக்களிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தார். இந்த கடிதங்கள் அடிப்படையில் தற்போது தென்னரசு பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு அப்செட்டில் இருந்தாலும் கூட, இதை பற்றி பெரிதாக கவலைப்பட்டுக்கொள்ளவில்லையாம். ஏனென்றால் பொதுக்குழு வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்புகிறதாம்.

வழக்கு
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் வழக்கில் கூட எடப்பாடி பழனிசாமியை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. அதாவது அவரை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. அவருக்கு சின்னத்தை கொடுக்கவில்லை. இரண்டு பேருமே ஒன்றாக இருக்க வேண்டும். பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று கூறியது. தேர்தல் ஆணையமும் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. அதை நாங்கள் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் பொதுக்குழு உறுப்பினராக நாங்கள் அங்கீகரிக்கவில்லை, என்று கூறியது.

எடப்பாடிக்கு சிக்கல்
இரண்டுமே எடப்பாடிக்குத்தான் சிக்கலாக வந்தது. இப்போது எடப்பாடி தரப்பு வேட்பாளர் நின்றாலும் கூட.. அவரின் வேட்புமனுவில் கூட எடப்பாடி கையெழுத்து போட முடியவில்லை. தமிழ் மகன் உசேன்தான் கையெழுத்து போட்டுள்ளார். இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு குஷியில் இருக்கிறதாம். பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காதே.. உச்ச நீதிமன்றம் இப்படி செய்து இருக்காதே.. அப்படி என்றால் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வர சான்ஸ் குறைவு என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்புகிறதாம்.. ஈரோடு கிழக்கில் ஓ பன்னீர்செல்வத்தை இருள் சூழ்ந்தாலும் பொதுக்குழு வழக்கில் வெள்ளி முளைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம்!












Click it and Unblock the Notifications