காமெடி.. ஆம்ஆத்மி, காங்கிரஸை கலாய்த்த ஜேபி நட்டா.. இமாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி என நம்பிக்கை
சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஓட்டளித்தார். அதன்பிறகு காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியை கலாய்த்த ஜேபி நட்டா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரிசையில் நிற்கும் மக்கள்
காலை 11 மணி நிலவரப்படி 11.82 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இவர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,500 பேர் மட்டுமே ஓட்டளிக்க முடியும். அதன்படி மாநிலத்தில் மொத்தம் 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மும்முனை போட்டி
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டெல்லி, பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆம்ஆத்மியும் இங்கு களம் இறங்கி உள்ளதால் மும்முனை போட்டியாக உள்ளது. இருப்பினும் நேரிடை போட்டி என்பது பாஜக-காங்கிரஸ் இடையே தான் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுதவிர பிற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. களத்தில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஓட்டுபோட்ட ஜேபி நட்டா
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிலாஸ்பூரில் உள்ள விஜயாப்புரா வாக்குச்சாவடியில் இன்று ஓட்டு செலுத்தினார். அதன்பிறகு அவர் கூறுகையில், ‛‛இன்று காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதில் வைராக்கியம் இருப்பதாக நினைக்கிறேன். அதிகளவில் வாக்குப்பதிவாக வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.

பாஜகவுக்கு வெற்றி
மேலும் அவர் கூறுகையில், ‛‛இமாச்சல பிரதேச மக்கள் இரட்டை என்ஜின் ஆட்சியை விரும்புகின்றனர். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எய்ம்ஸ், சாலை கட்டமைப்புகளின் வளர்ச்சியை பார்க்கின்றனர். இதனால் மக்களின் ஆதரவு என்பது பாஜகவுக்கு உள்ளது. இதனால் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும்'' என்றார்.

ஆம்ஆத்மி தாக்கம் இல்லை
மேலும் அவர், ‛‛இமாச்சல பிரதேசத்தில் மும்முனை போட்டி நிலவுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆம்ஆத்மி கட்சி உத்தர பிரதேசம், கோவாவில் போட்டியிட்டது. அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இமாச்சல பிரதேசத்தில் 67 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறமாட்டார்கள். ஏனென்றால் மக்களுக்கு உண்மையை அறிந்து வைத்து உள்ளனர்'' என்றார்.

காங்கிரஸ் மீது விமர்சனம்
அதோடு காங்கிரஸ் கட்சி பற்றி அவர் கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சியை யாரும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சி தான் நிறுத்தியது. தற்போது அதனை மீண்டும் வழங்குவதாக கூறி உள்ளது. மக்களின் நம்பிக்கை என்பது பாஜக மீது உள்ளது'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications