ஓசூர் பக்கம் ஒன்றல்ல, இரண்டல்ல.. 22 காட்டு யானைகள் முகாம்.. மக்களே உஷார்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 22 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் 10 கிராம மக்களுக்கு வனத்துறை பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சானமாவு வனப்பகுதியில் இருந்த யானைகள் நேற்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால் உணவு தேடி ஊடேதுர்க்கம் காட்டு பகுதிக்கு வந்த யானைகள் தற்போது கெலமங்கலம் அடுத்த ஒன்னுகுறிக்கி என்னும் கிராம மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இதையடுத்து, ஒன்னுக்குறிக்கி, மல்லேப்பாளையம், ஜெக்கேரி, கோட்டட்டி உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இராயக்கோட்டை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை யானைகளை ஊடேதுர்க்கம் அல்லது தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- கிராம மக்கள்: வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்.
- வயல் வேலை: தவிர்க்க வேண்டும்.
- குழந்தைகள்: வெளியில் விளையாட அனுமதிக்கக் கூடாது.
- வனத்துறையினர்: யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் என்ன செய்யலாம்?
- தகவல் பகிர்தல்: இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களையும் பாதுகாப்பாக இருக்க வைக்கலாம்.
- வனத்துறையை தொடர்பு கொள்ளுதல்: எந்தவிதமான அவசர நிலையும் ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.
வனத்துறையின் அறிவுரை:
- அமைதியாக இருங்கள்: யானைகளை பார்த்தால் அமைதியாக இருந்து விட்டு வனத்துறையை அணுகுங்கள்.
- அருகில் செல்ல வேண்டாம்: யானைகளை அருகில் சென்று பார்க்கவோ, தொடவோ கூடாது.
- சத்தம் எழுப்ப வேண்டாம்: யானைகள் பயந்து தாக்கக்கூடும் என்பதால் சத்தம் எழுப்ப வேண்டாம்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications