சிக்கன் பிரியாணியில் புழு.. பிரியாணி கடையில் புகார் அளித்த வாடிக்கையாளருக்கு மேலும் அதிர்ச்சி
ஒசூர்: ஒசூர் அருகே பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு புழு பிரியாணி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. சைவ பிரியர்களாக இருந்தால் வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி உள்ளிட்டவைகளை விரும்புவர்.
அது போல் அசைவ பிரியர்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, பீப் பிரியாணி, இறால் பிரியாணி ஆகியவை அவர்களுக்கு பிடிக்கும். அந்த அளவுக்கு காது குத்து, பிறந்தநாள், திருமணம், திருமண நாள் உள்ளிட்ட விசேஷங்களுக்கு பிரியாணிதான் ஃபேமஸ்.

ஒசூர்
அந்த வகையில் கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் எனுமிடத்தில் அமைந்துள்ளது ஒரு அசைவ ஹோட்டல். பிரபலமான இந்த ஹோட்டலில் தினந்தோறும் பல்வேறு தரப்பு மக்கள் என 800 முதல் 1000 பேர் வரை சாப்பிட்டு செல்லும் பிசியானது இந்த ஹோட்டல்.

நண்பர்கள் 5 பேர்
காவேரிப்பட்டிணத்தை அடுத்த சப்பாணிபட்டி பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், ராமச்சந்திரன், அருள் ஆகிய 5 பேர் சின்னார், அந்த பிரியாணி ஹோட்டலில் 4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். சிக்கன் பிரியாணி வந்ததும் அதில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

அலட்சியம்
கத்தரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக கூறி உள்ளனர். கோபமடைந்த இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஹோட்டல் ஊழியர்கள் போன் செய்து கொடுக்க எதிர் திசையில் பேசிய மேனேஜர், பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா சாப்பிட்டு போகுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள்
இது குறித்து ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பிரபலமான ஹோட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிடக் கூடிய இந்த ஹோட்டலில் இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக் கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications