கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி - ஓசூர் மருத்துவமனையில் அனுமதி!
ஓசூர்: கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 ஆக உள்ளது.

தமிழகத்தில் 1,13,856 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தும் உள்ளனர். மொத்தம் 2,403 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். இதேபோல் அமைச்சர்கள் மற்றும் திமுக- அதிமுக எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.
இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செங்குட்டுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications