ஓசூரை வளர்த்தெடுக்கும் டாடா.. நாடே வியக்கப்போகுது.. A டூ Z எல்லாமே மாறும்.. இதுதான் மெகா பிளான்
ஓசூர்: டாடா நிறுவனம் இப்போது தமிழ்நாட்டின் ஓசூரில் மிகப் பெரியளவில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கிய தொழிற்துறை நகரங்களில் ஒன்றான ஜாம்ஷெட்பூருக்கு இணையாக ஓசூரை வளர்த்தெடுப்பதில் டாடா ஆர்வமாக இருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே தங்களின் பல நிறுவனங்களின் மூலம் ஓசூரில் தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருகின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூருக்கும் தமிழகத்தில் இருக்கும் ஓசூருக்கும் என்ன ஒற்றுமைகள் உள்ளன. இரு நகரங்களுக்கும் இடையே சுமார் 2000 கிமீ தூரம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது என்ன ஒற்றுமை இருக்க முடியும் என நீங்கள் கேட்கலாம்.

ஆனால், தூரத்தைத் தாண்டி இரு நகரங்களுக்கு இடையே முக்கிய ஒற்றுமை ஏற்பட போகிறது அது என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர்: டாடா குழுமம் தனது தொடக்கக் காலங்களில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்த நகரம் தான் ஜாம்ஷெட்பூர். நமது நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முதல் தொழில் நகரமாகும். இந்த நகர் இப்போது தொழில்துறையில் வளர்ந்து நிற்க டாடா குழுமம் தான் முக்கிய காரணம். இப்போதே அதே டாடா நிறுவனம் ஓசூரில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் கவனம் செலுத்தி வருகிறது.
ஜாம்ஷெட்பூரை போலவே மிகப் பெரிய தொழில் நகரமாக ஓசூரை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இரு நகரத்திலும் டாடா குழுமத்தின் முதலீடு தான் அதிகம் என்றாலும் இரண்டிற்கும் இடையே முக்கிய வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால் ஜாம்ஷெட்பூர் முழுக்க முழுக்க ஸ்டீல் தொழிற்சாலைகளால் நிறைந்த ஒன்று. ஆனால், ஓசூரில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
முதலீடுகள்: தமிழ்நாட்டில் தேவையான திறன் கொண்ட இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். இது முதல் பிளஸ் பாயிண்டு. அடுத்து நாட்டின் ஐடி தலைநகரான பெங்களூரில் இருந்து வெறும் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஓசூரின் 2வது பிளஸ் பாயிண்டு. அங்கு இப்போது பல நிறுவனங்கள் முதலீடுகளை அறிவித்துள்ள நிலையில், அவை எல்லாம் செயல்பாட்டிற்கு வரும் போது பெங்களூருக்கான பக்காவான துணை நகரமாக ஓசூர் உருவெடுக்கும்.
டாடா: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இப்போது ஓசூரில் ஆப்பிள் ஐபோன்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்காகப் பல நூறு பேரை பணிக்கு எடுத்துள்ள டாடா, அங்கு உற்பத்தியை அதிகரித்து வருகிறது. டாடா மட்டுமின்றி டிவிஎஸ், அசோக் லேலண்டு, ஏதர், ஓலா என பல்வேறு நிறுவனங்களும் ஓசூரில் தாங்கள் மெகா தொழிற்சாலைகளை அமைந்துள்ளன. இருப்பினும், அவர்களைத் தாண்டி டாடா நிறுவனமே மிக முக்கிய நிறுவனமாக அங்கே இருக்கிறது.
மெகா பிளான்: அங்கு உள்ளூர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் அதிக நபர்களுக்கு வேலை தருவது மட்டுமின்றி, அதிக சம்பளத்திலும் பலருக்கு வேலை தருகிறது. வரும் காலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மேலும் பல முதலீடுகளை செய்ய உள்ளது. இதனால் அங்கே உள்ளூர் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓசூரில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதுவும் வளர்ச்சியை மிக பெரியளவில் பூஸ்ட் செய்யும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications