ஓசூர் பண்ணை வீட்டில் யாரிந்த பெண்கள்? தென்னந்தோப்பில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம்.. திகைத்த கிருஷ்ணகிரி
ஓசூர்: நம்முடைய போலீசார் போதையில்லா மாநிலத்தை உருவாக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. செக்போஸ்ட்களில் தீவிர சோதனைகளையும் அரங்கேற்றி வருகிறார்கள்.. இதனால் ஓரளவு போதைப்புழக்கம் குறைந்துள்ளது.. எனினும், தமிழக எல்லைகளில் போதை நடமாட்டமும் இன்னும் நிலவுவதாக தெரிகிறது. அந்தவகையில் ஓசூர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தந்து வருகிறது. யாரிந்த 3 பேர்?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கக்கனூர் சோதனைச்சாவடியில், கடந்த 24ம் தேதி இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கர்நாடகாவிலிருந்து ஒரு கார் தமிழகத்திற்குள் நுழைந்தது.

எனவே, அந்த காரை போலீசார் நிறுத்த சொன்னார்கள்.. ஆனால், கார் நிற்காமல் அங்கிருந்து அதிவேகத்தில் பறந்தது.. இதனால் போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர்.. அந்த காரோ, பேரிகை அருகே முதுகுருக்கி கிராமத்திலுள்ள தென்னந்தோப்பிற்குள் சீறிப்பாய்ந்தது.
தென்னந்தோப்பு
எனவே போலீசாரும் தென்னந்தோப்பில் நுழைந்தனர்.. அப்போதுதான் அங்கே இரவு நடன நிகழ்ச்சி, டிஜே சவுண்டுடன் நடந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. உச்சக்கட்ட போதையில் இளைஞர்களும், இளம்பெண்களும் டான்ஸ் ஆடி கொண்டிருந்தனர்....
இவர்களில் ஏராளமானோர் அரை நிர்வாண ஆடைகளுடன் காணப்பட்டனர்.. போலீசார் அங்கு வந்து நிற்பதுகூட தெரியாமல், போதையில் ஆடியபடியே இருந்தனர்.. உடனே போலீசார் அத்தனை பேரையும் சுற்றி வளைத்தனர்.. அவர்களை பிடித்தனர்.. அங்கு சோதனை நடத்தி, ஏராளமான போதை மாத்திரைகளையும், காஸ்ட்லி மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
3 பேருமே சிக்கினர்
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த பாலாஜி (36), பீகாரைச் சேர்ந்த ரஜினீஸ்குமார் (42), கோவாவைச் சேர்ந்த இக்னேஸஸ் லாரன்ஸ் காமி லோ (47) ஆகியோர் என்பது தெரியவந்தது.. இவர்கள்தான் செக்போஸ்ட்டில் காரை நிறுத்தாமல், தென்னந்தோப்புக்குள் வந்தனர் என்பதும் உறுதியானது.. இதையடுத்து, மேற்கண்ட 3 பேரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.. அப்போதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின..
அதாவது, அந்த பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தென்னந்தோப்பை, பெங்களூரு கோரமங்கலத்தை சேர்ந்த பாலாஜி, வருஷத்துக்கு ரூ.2 லட்சத்திற்கு குத்தகை எடுத்திருக்கிறாராம்.. இக்னேஸஸ் லாரன்ஸ் காமி லோ என்ற கோவா நபருடன் சேர்ந்து பண்ணை வீடு போல அமைத்து, இரவு விருந்து நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
தென்னந்தோப்பில் பண்ணை வீடு
அதுமட்டுமல்ல, இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வார்களாம்.. இவர்களுக்கே இரவு விருந்தில் முன்னுரிமையாகும்.. இதில், போதை பொருட்களும் சப்ளை செய்யப்படுமாம்.. இந்த தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..
போதை பொருளை தடுக்க நம்முடைய போலீசார் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வெளிமாநிலத்திலிருந்து போதை சப்ளை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.. இப்போது பாலாஜி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, கடுமையான வார்னிங் தந்து அவர்களை பத்திரமாக போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications