ஃபுல் போதையில் ஆண் நண்பனுக்கு தாலி கட்டிய நபர்.. அப்புறம் நடந்ததுதான் பெரிய அதிர்ச்சி!
தெலங்கானாவில் குடிபோதையில் ஆணும் ஆணும் திருமணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்: குடிபோதையும் ஆணுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் ஒரு மதுப்பிரியர். போதை தெளிந்த உடன் நடந்த சம்பவம்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இவருக்கு மெடெக் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆட்டோ டிரைவருக்கும் மதுக்கடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருமே டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

முழு போதையில் பேச்சு
குடிப்பதை மட்டுமே முழு நேர தொழிலாகக் கொண்ட இருவரும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மதுக்கடையில் அதிகமாக குடித்துள்ளனர். பேச்சு குடி போதையில் இருவரும் ஒரினச் சேர்க்கை திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

போதையில் தாலி கட்டிய நபர்
இருவரும் குடிபோதையிலிருந்த நிலையில் இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு சென்று 22 வயது ஆட்டோ டிரைவர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து தனது மனைவியாக்கிக் கொண்டார். திருமணம் நடந்தது கூட தெரியாமல் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

என் கணவருடன் சேர்த்து வையுங்கள்
கழுத்தில் தாலியுடன் சென்ற இளைஞர் தனது கணவரை தேடினார். ஜோகிபேட் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் ஆட்டோ டிரைவரின் பெற்றோரிடம் தனக்கும் அவர்களது மகனுக்கும் நடந்த திருமணம் குறித்து கூறினார். அதைக்கேட்டு ஆட்டோ டிரைவரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

வாழ்ந்தால் உன்னோடுதான்
இனி தான் தனது கணவருடன் தான் வாழ்வேன் என்று அந்த இளைஞர் சொல்லவே, ஆட்டோ டிரைவரின் பெற்றோர் சண்டை போட்டனர். மருமகளுடன் (மருமகன்) சண்டை போட்டு வெளியே போ அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.

போலீசில் புகார்
தனது வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாகி விட்டதே என்று கலங்கிய இளைஞர் கழுத்தில் தாலியுடன்
காவல் நிலையத்தில் போய் புகார் அளித்தார். போலீசார் என்ன செய்வது விசித்திரமான கேஸ் ஆக இருக்கிறதே என்று நினைத்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

ரூ. 10000 பணம்
தாலி கட்டிக்கொண்ட அந்த 21 வயது இளைஞர் தன்னை தனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தனக்கு வாழ வழியில்லை அதனால் இனி தான் தனியாக வாழ ரூ1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஆட்டோ டிரைவர் குடும்பமோ, அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று யோசித்தனர். பின்னர் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனர். குடிபோதையில் நடந்த திருமணம் போலீஸ் ஸ்டேசனில் முறிந்து போனது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications