லீக்கான சிசிடிவி.. ஹோட்டலுக்கு கூட்டி சென்று.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. குலுங்கிய ஹைதராபாத்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அதிர்ச்சி குறைவதற்கு முன்னரே ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் ஹைதராபாத்தில் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத் சிறுமி வன்கொடுமை செய்யப்படுவதற்கு முன்னர் அவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடரும் வன்கொடுமைகள்

தொடரும் வன்கொடுமைகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்புர் கெரி பகுதியில் 17 மற்றும் 15 வயது நிரம்பிய இரண்டு சகோதரிகள் கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குள் தற்போது தென்னிந்தியாவின் ஹைதராபாத் நகரத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது.

கடத்தல்

கடத்தல்

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருந்து வாங்குவதற்காக சிறுமி ஒருவர் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வராததால் கலக்கமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து சிறுமி ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

 இரண்டு நாட்கள்

இரண்டு நாட்கள்

விசாரணையில் சிறுமி இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார். சிறுமியை காரில் வந்த இருவர் கடத்தியதாகவும், பின்னர் ஊசி மூலம் போதை பொருளை கொடுத்து, மதுவையும் ஊற்றிக்கொடுத்து சிறுமியை இரண்டு நாட்கள் வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் காவல்துறையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதில் சிறுமி அழைத்துச் செல்லப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பிரபல ஓட்டலின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சிறுமி இருப்பதும் அந்த இரண்டு குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் இவர்கள் தங்கியிருந்த அறையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

போக்சோ

போக்சோ

இதில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஆள் கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் நயீமத் (26), ரபீஷ் (20) ஆகியோரில், ரபீஷ் உயர்நிலை பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். நயீமத் சவுதியில் ஆப்டிகல் கடை வைத்து நடத்தி வருகிறார். தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை பரிசோதித்த பின்னரே பாலியல் வன்கொடுமை குறித்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+