Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’டபுள்ஸ்’ கேக்குதா! கட்டி வைத்து கணவருக்கு செருப்படி + ஷூ மாலை! பப்ளிக்னு கூட பாக்கலையே.. என்னா அடி?

Subscribe to Oneindia Tamil

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலத்தில் தன்னை குழந்தையுடன் தவிக்க விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவரை அவரது மனைவி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததோடு செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் குடும்ப உறவுகள் சிதைந்து வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்தொற்றுமை காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்வது அல்லது வேறு துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களது மனம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனை.

முறையற்ற உறவு

முறையற்ற உறவு

ஆனால் முறையற்ற உறவு திருமணம் தாண்டிய உறவு உள்ளிட்ட பிரச்சனைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது இது இரு நபர் சார்ந்த விவகாரமாக இருந்து இரு குடும்பம் சமூகம் குழந்தைகள் என பலதரப்பட்டோரை பாதிப்பதால் தற்போது இது ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. ஆண்கள் செய்யும் தவறுகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கின்றார் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

2வது திருமணம்

2வது திருமணம்

கணவன் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலையில் தற்போது பெண்கள் இல்லை. அவ்வாறு ஒரு பெண் கோபப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் உதாரணமாக மாறி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஸ்வர்ண பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கும் அகிலா என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

மனைவி ஆத்திரம்

மனைவி ஆத்திரம்

தம்பதியினருக்கு மூன்று வயதில் குழந்தை இருக்கும் நிலையில் திருமணத்தின் போது சுமார் 20 லட்சம் ரூபாய் ஸ்ரீகாந்த் வரதட்சணையாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை விட்டு பிரிந்த ஸ்ரீகாந்த் வாரங்கள் பகுதியில் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது மேலும் வீட்டுக்கு வராமல் அவருடன் தங்கி இருந்ததால் ஆத்திரமடைந்தார் அகிலா.

செருப்பு மாலை

செருப்பு மாலை

இதனால் கணவரை அடித்து துவைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பாலயே அடித்துள்ளார். மேலும் பழைய செருப்புகளை மாலையாக கோர்த்து அவரது கழுத்தில் அணிவித்துள்ளார் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அங்கு சென்ற போலீசார் ஸ்ரீகாந்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+