ஏ.ஆர்.ரஹ்மானா யாரு? முதல் அழகான நர்ஸ் வரை! சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்ட நடிகர் பாலகிருஷ்ணா
செவிலியர்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகர் பாலய்யா மன்னிப்பு கேட்டார்
ஹைதராபாத்: செவிலியர்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, இவர் ஜூனியர் பாலய்யா என அழைக்கப்படுகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டி கொள்வார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு பாலகிருஷ்ணா வந்திருந்தார். அங்கு அவர் வருவது குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை பார்க்க கூடினர்.

பாலகிருஷ்ணா
அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் திடீரென பாலகிருஷ்ணாவின் அருகில் சென்று போட்டோ எடுக்க முயன்றார். இதனால் பாலகிருஷ்ணா கோபமடைந்தார். அந்த ரசிகரை கடுமையாக திட்டினார் பிறகு ஓங்கி அடித்தார். இந்த வீடியோ சமூகவலைதவளங்களில் வைரலானது. இது போல் பல முறை தன்னுடன் போட்டோ எடுக்க வரும் ரசிகர்களை பாலகிருஷ்ணா தாக்கியுள்ளார்.

அகண்டா திரைப்படம்
கடந்த ஆண்டு அகண்டா திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் தனது குழந்தையுடன் பாலகிருஷ்ணாவை பார்க்க சென்றார். அப்போது அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தூங்குறியானு கேட்டு அந்த குழந்தையை பாலய்யா அடித்து எழுப்பினார். இந்த வீடியோவும் வைரலாகி பாலய்யாவுக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தி தந்தது.

தெலுங்கு தொலைகாட்சி சேனல்
அது போல் தெலுங்கு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலய்யா பேட்டி கொடுத்தார். அங்கிருந்த தொகுப்பாளர், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பாலகிருஷ்ணா, ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாணி உள்ளது. அது போல் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென தெரியவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு ஹிட் பாடலை கொடுப்பார் என்கிறார்கள்.

ஆஸ்கர் நாயகன்
அவர் ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார் என்கிறார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியம் அல்ல. பாரத ரத்னா விருதெல்லாம் என்டிஆரின் செருப்புக்கு சமம், கால் விரல் நகத்திற்கு சமம் என கூறியிருந்தார். பாலகிருஷ்ணாவின் இத்தகைய பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாலகிருஷ்ணா நடித்த பாடல்களை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.

அழகான நர்ஸ்
அது போல் இளையராஜாவையும் புகழ்வதுபோல் புகழ்ந்து அவருடைய பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்து இருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வந்த பாலகிருஷ்ணா அண்மையில் ஒரு தகவலை கூறி மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். ஒரு முறை காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவ பணியாளரிடம் இது சின்னம் காயம் தான் , எனக்கு சிகிச்சை வேண்டாம் என சொன்னேன். அப்போது அங்கு ஒரு நர்ஸ் வந்தார். மிகவும் அழகாக இருந்தார். உடனே நானே அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக் கொண்டேன் என்றார்.

மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா
இவரது பேச்சு வைரலான நிலையில் செவிலியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் தனது கருத்துக்கு பாலய்யா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் சொன்னதன் அர்த்தம் முற்றிலும் திரிக்கப்பட்டுள்ளது. தனது வார்த்தைகள் செவிலியர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பாலய்யா தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications