குணமடைந்தார் குஷ்பு! அப்போலோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்! ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வு!
ஹைதராபாத்: நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடுமையான காய்ச்சலில் இருந்து குணமடைந்தார்.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி அடுத்து வரும் ஒரு வார காலமும் முழு ஓய்வில் இருக்கவுள்ளார்.
பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது குஷ்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

கடும் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்பட்ட குஷ்புவுக்கு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்தனர்.
அதன் பயனாக அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ள மருத்துவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்காவது ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் குஷ்பு அடுத்த ஒரு வாரத்திற்கு வீட்டில் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஃப்ளூ வைரஸ் தொடர்பான நோய்களும் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்புவுக்கு ஃப்ளூ வைரஸ் காரணமாக தான் காய்ச்சல் வந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே தாம் நலம் பெற்றது தொடர்பாக டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள குஷ்பு, தனக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பயணங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் அதனை ஏற்று தாம் ஓய்வில் இருக்கப் போவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications