துல்கர் சல்மான் படத்தால் வந்த வினை.. லக்கி பாஸ்கர் பார்த்து 4 பள்ளி மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு
விசாகப்பட்டினம்: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‛லக்கி பாஸ்கர்' திரைப்படத்தை பார்த்த 9 ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ‛லக்கி பாஸ்கர்' என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையின்போது வெளியானது. இந்த படம் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிசில் நல்ல கலெக் ஷன் செய்தது.
இந்நிலையில் தான் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்ததும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் 9 ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் எஸ்கேப் ஆகி உள்ளனர்.

அதாவது விசாகப்பட்டினத்தில் உள்ள மாகாராணிபேட்டையில் உள்ள பள்ளியில் சரண் தேஜா, ரகு, கார்த்திக், கிரண் குமார். இவர்கள் அனைவரும் 9 ம் வகுப்பு படித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பார்த்துள்ளனர்.
அந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் வங்கியில் கேஷியராக நேர்மையாக வேலை செய்வார். அவருக்கு புரோமோஷன் கிடைக்காது. இதனால் விரக்தியடையும் அவர் நேர்மையை கைவிட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுவார். அதன்பிறகு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து கார், வீடு வாங்குவார்.
இந்த காட்சியை பார்த்த 4 மாணவர்களுக்கும் மனநிலை மாறி உள்ளது. அதாவது நடிகர் துல்கர் சல்மானை போல் பணம் சம்பாதித்து வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து சென்றுள்ளனர். தற்போது வரை அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரியவந்தது.
இதுபற்றி மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மாணவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். முதற்கட்டமாக போலீசார் ஆந்திராவில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். அதோடு மாணவர்களின் போட்டோக்களை அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அனுப்பி அடையாளம் காணும் ஈடுபட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications