அக்னிபாத் போராட்டம் ஹைதராபாத் இளைஞர் பலி.. அத்தனைக்கும் காரணம் மத்திய அரசு தான்.. விளாசும் கேசிஆர்
ஹைதராபாத்: அக்னிபாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தெலங்கானா முதல்வர் கேசிஆரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை சாடியுள்ளார்.
Recommended Video
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் வரை பணிபுரியலாம்.
அதன் பின்னர் அவர்களில் 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும். மீதமுள்ள 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

அக்னிபாத்
இது குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல மாநிலங்களில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பீகார் மாநிலத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்ல மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. இப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பீகாரில் சுமார் 15 மாவட்டங்களில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
அதேபோல நாடு முழுவதும் ரயில் எரிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் குறைந்தது 12 ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 214 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.. 11 ரயில்கள் திசை திருப்பப்பட்டுள்ள நிலையில், 90 ரயில்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை. இதன் காரணமாக ரயில் பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு
தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, போராட்டம் நடத்தினர். அங்கிருந்த ரயில்களுக்கும் அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்து. இதில் வாரங்கலை சேர்ந்த 22 வயது ராகேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரங்கல்
இந்நிலையில், இளைஞர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் கடுமையாகச் சாடி உள்ளார். இளைஞரின் உயிரிழப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள கேசிஆர், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியும் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு
இளைஞரின் மரணத்திற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம்சாட்டிய முதல்வர், தெலுங்கானா மக்களை மாநில அரசு பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெறும் நிலையில், இந்த விவகாரத்தில் நாட்டில் ஏற்படும் முதல் உயிரிழப்பாக தெலங்கானா சம்பவம் உள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications