Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரை கூடி கிழப் பருவமெய்தி..அந்த கால ஓ காதல் கண்மணி ஜோடி.. 60 ஆண்டுகள் கழித்து திருமணம்! ஏ சூப்பர்பா!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எத்தனை வயது ஆனாலும் காதல் மட்டும் குறையாது என்பதற்கு உதாரணம் தான் தெலுங்கானாவை சேர்ந்த இந்த தம்பதிகள். 60 ஆண்டுகளுக்கு முன் மாலை மாற்றி கந்தர்வ திருமணம் செய்து கொண்ட நிலையில், தனக்கு தாலி கட்ட வேண்டும் என்ற ஆசையை 80 வயது கணவரிடம் சொல்லி பேரன் பேத்திகள் முன்னிலையில் அதை நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார் இந்த மூதாட்டி.

இந்த உலகத்தில் எத்தனை யுகங்கள் ஆனாலும் மாறாத ஒன்று என்று இருந்தால் அது காதல் தான்.. அமர காதல் தொடங்கி அலைபாயுதே காதல் வரை பல்வேறு காதல்களை தமிழ் சினிமாவும் செதுக்கி எடுத்து விட்டது.

An old couple who got married at the age of 80 in front of their children

பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல், படிக்கும் போது காதல், திருமணத்திற்கு பிறகு காதல் , திருமணம் கடந்த காதல் என பல்வேறு காதலை பார்த்திருப்போம்.. ஆனால் காதலித்து ஒன்றாக வாழ்ந்து பின் திருமணம் செய்துள்ளது இந்த ஜோடி.. ஆனால் அவர்களுக்கு மகன்களும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்..

முதிய காதல்: 60 ஆண்டுகளாக தாலியே கட்டிக் கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து மகன்கள் மகன்கள் மகள்கள் பேரக்குழந்தைகள் என குடும்ப சகிதமாக இருந்த ஜோடி தற்போது மனைவியின் ஆசைக்காக தாலி கட்டி முறைப்படி கணவன் மனைவியாக வாழத் தொடங்கி இருக்கின்றனர். தாலி என்னும் வேலி கண்டிப்பாக வேண்டும் என 70 வயதில் அடம்பிடித்து மூதாட்டி தற்போது கணவனை முறைப்படி தாலி கட்ட வைத்திருக்கிறார்

கந்தர்வ திருமணம்: தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த குகுலோத்து லாலம்மா (80 வயது)- சமிதா நாயக் (70 வயது) தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர் .ஆனால் அவர்களது பெற்றோர் அதற்குப் பிறகு அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

தாலி ஏக்கம்: காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த லாலம்மா அதன் பிறகு மகன்கள் மகள்கள், அவர்களுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களை ஒரு ஆளாக ஆக்கி இருக்கிறார். இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன் பேத்திகள் என பெரிதாகி விட்டது. ஆனாலும் 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் சமிதாவுக்கு இருந்திருக்கிறது. தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறியிருக்கிறார்.

80 வயதில் மீண்டும் திருமணம்: ஆனாலும் விடாப்பிடியாக சமிதா தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன் பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த சமிதாவுக்கு உற்றார் உறவினர் முன்னிலையில் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள் அவர்களது பிள்ளைகள் முன்னிலையில் தாலி கட்டினார். தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்

வாழ்த்திய உறவுகள்: தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு புதிய தம்பதியை வாழ்த்தினர். மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்தாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கிறது. இதையடுத்து தான் திருமணம் செய்து கொள்ள நினைத்ததாகவும் தனது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது தனக்கு மகிழ்ச்சிகரமாக இருந்ததாக கூறினார் சமிதா.. மேலும் தங்களது பெற்றோருக்கு திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் எந்த பிள்ளைகளுக்கும் கிடைக்காது தங்களுக்கு கிடைத்திருப்பது பெருமை என அவர்களது மகன்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+