ஆஹா ராம் சரண் சொல்லிக் கொடுக்க.. நாட்டு நாட்டு பாடலுக்கு ஹூக் ஸ்டெப்பை ஆடிய ஆனந்த் மகிந்திரா
நாட்டு நாட்டு பாடலுக்கு ராம் சரணிடம் இருந்து டான்ஸ் மூவ்மென்ட்டை கற்று கொண்டு ஆடிய ஆனந்த் மகிந்திரா
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவுக்கு நடிகர் ராம்சரண் நாட்டு நாட்டு பாடலை ஆடுவதற்கு கற்றுக் கொடுத்தார்.
இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் கடந்தாண்டு வெளியானது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் கிடைத்துள்ளது.
படத்தில் இடம்பெற்ற பாடல் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீரவாணி அந்த விருதை பெற்றிருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமடைந்திருந்தது.

தமிழ் தெலுங்கு
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ 550 கோடி பட்ஜெட்டில் உருவானது. திரையரங்குகளில் படம் வெளியான 15 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இரட்டையர்கள் போல் உடையணிந்து டான்ஸில் சிறந்து விளங்கும் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடியது சிறப்பாக இருந்தது.

ஆங்கிலேயர் காலத்து கதை
இந்தியில் நாச்சோ நாச்சோ என்றும் தமிழில் நாட்டுக் கூத்து என்றும் இந்த பாடல் வெளியானது. 1920 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ, மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான கற்பனை கதைதான் இந்த ஆர்ஆர்ஆர்.

முழு பெயர்
இந்த படத்தின் முழு பெயர் ரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR). இந்த படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரணை ஆனந்த் மகிந்திரா சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

டான்ஸ் ஸ்டெப்
அப்போது ராம் சரண், ஆனந்த் மகிந்திராவுக்கு நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப்பை எப்படி ஆட வேண்டும் என கற்றுக் கொடுத்தார். இதுகுறித்து வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், நாட்டு நாட்டு பாடல் ஸ்டெப்பை கற்று தந்தமைக்கு நன்றி ராம் சரண்.

ஆஸ்கர் வெல்ல வாழ்த்துகள்
ஆஸ்கர் வெல்ல வாழ்த்துகள் நண்பா என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்டிற்கு ராம் சரண் பதில் கொடுத்துள்ளார். ராம் சரண் தனது பதிவில் ஆனந்த் மகிந்திரா நீங்கள் என்னை விட சிறப்பாகவும் வேகமாகவும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினீர்கள். உங்களுடன் உரையாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்ஆர்ஆர் படக் குழுவினருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
|
ஆனந்த் மகிந்திரா
ஆனந்த் மகிந்திராவும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். நெட்டிசன்களின் புதுமையையும் புது முயற்சியையும் வெளியுலகிற்கு கொண்டு வந்து அவர்களை பாராட்டுவார். அது போல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூப்பில்லா தமிழே தாயே என கீதத்தை வெளியிட்டிருந்தார். இந்த பாடல் குறித்து ஆனந்த் மகிந்திரா தமிழில் ட்வீட் போட்டிருந்தார். அதில் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ என குறிப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டேக் செய்திருந்தார். இதற்கு ஆஸ்கர் நாயகனோ மிக்க மகிழ்ச்சி! காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று ஒட்டுமொத்த உலகத்தையம் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக மூப்பில்லா தமிழ் இருக்கிறது என்றும் சொல்கிறோம் மிக்க நன்றி என தெரிவித்திருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications