தெலுங்கானா போலீஸை அறைந்த ஆந்திரா சிஎம் ஜெகன் சகோதரி- பெண் போலீஸ் கையை முறித்த அம்மா-பெரும் பரபரப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா போலீசாரை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவை சந்திக்க சென்ற அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா, பெண் போலீஸ் ஒருவரது கையை முறித்து சண்டையிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொடி பறக்க ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தொடங்கினார். அம்மாநில அரசுக்கு எதிராக நடைபயணம், போராட்டம் என படுபிசியாக இருந்து வருகிறார் ஒய்.எஸ். ஷர்மிளா.

தெலுங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பல்வேறு புகார்கள ஒய்எஸ் ஷர்மிளா முன்வைத்து வருகிறார். இதனை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி கைதாகியும் வருகிறார். டெல்லியிலும் கூட ஒய்எஸ் ஷர்மிளா, கேசிஆருக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானார்.
தெலுங்கானாவில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் லீக் விவகாரம். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராவதற்கு ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று நேரில் சென்றார். அப்போது ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரது வாகனத்தை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரியை கீழே தள்ளிவிட்டார். பின் பெண் போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் செய்த ஷர்மிளா, ஒருகட்டத்தில் பெண் போலீஸ் ஒருவரை பளார் என கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பெண் போலீஸை ஒய்.எஸ்.ஷர்மிளா கன்னத்தில் அறையும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஷர்மிளா கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனிடையே கைது செய்யபப்ட்ட ஷர்மிளாவை சந்திக்க அவரது தாயார் விஜயம்மா, ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையம் சென்றார். அங்கு விஜயம்மாவையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் செய்தார் விஜயம்மா. போலீசாரை மிரட்டியும் பார்த்தார் விஜயம்மா. ஆனாலும் போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்தனர். இதனால் கொந்தளித்த விஜயம்மா, பெண் போலீஸ் ஒருவரது கையை முறித்து தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் போலீசுக்கும் விஜயம்மாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இப்போது இந்த வீடியோவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, தாய் விஜயம்மா ஆகியோர் தெலுங்கானா போலீஸை மாறி மாறி தாக்கி இருப்பது பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
#WATCH | YSRTP Chief YS Sharmila's mother YS Vijayamma shoves police personnel as she visits her daughter at Jubilee Hills Police Station after her detention#Hyderabad pic.twitter.com/jdchj1LnTU
— ANI (@ANI) April 24, 2023
#WATCH | Telangana Police detains YSRTP Chief YS Sharmila and shifts her to the local police station. She was detained after police officials received information about her visiting SIT office over the TSPSC question paper leak case pic.twitter.com/n6VaYgRarx
— ANI (@ANI) April 24, 2023
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications