Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியாணிக்கு ரைத்தா கேட்ட இளைஞர் அடித்து கொலை.. ஹோட்டல் ஊழியர்கள் அடாவடி.. பரிதாபமாக பறிபோன உயிர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உணவகம் ஒன்றில் தயிர் கேட்டதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்பட்டு பொதுமக்கள் வன்முறையில் இறங்கும் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது.

 Argument over one extra raita for biryani lead to murder in Hyderabad

அப்படியொரு மோசமான சம்பவம் தான் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு உணவகம் ஒன்றில் சாப்பிட வந்த இளைஞருக்கும் உணவைப் பரிமாறும் ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஷாக் சம்பவம்: ஹைதராபாத்தின் பஞ்சாகுட்டா என்ற இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய சப் இன்ஸ்பெக்டர் சிவ சங்கர் மற்றும் தலைமைக் காவலர் சங்கர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த் உத்தரவிட்டார்.

அப்பகுதியில் பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருபவர் முகமத் லியாகத்.. 32 வயதான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஏழு நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிட அங்குள்ள உணவகத்திற்கு இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளார். அவர்கள் இரண்டு பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர். தொடக்கத்தில் எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அப்போது முகமத் பிரியாணிக்குத் தயிர் ரைத்தா கேட்டுள்ளார். அங்கே தான் அனைத்து பிரச்சினையும் ஆரம்பித்துள்ளது.

தயிர் ரைத்தா: இது குறித்து போலீசார் கூறுகையில், "முகமத் கூடுதலாக ஒரு தயிர் ரைத்தாவை கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உணவு பரிமாறுவோருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முகமத்திற்கும் சர்வர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறிய இருக்கிறது. அப்போது அந்த சர்வர் முகமதை கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நபர் உடனடியாக தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் பஞ்சாகுட்டா காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். முகமத் லியாகத் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், ​​அவரது நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் ஏற்பட்ட காயத்திலேயே அவர் மரணம் அடைந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸ் விசாரணை: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அந்த அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. கொலை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணை முடியும் வரை உணவகம் மூடப்பட்டே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடம் என்பதால் தடுப்புகள் வைத்து அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

அந்த நபர் உயிரிழக்க என்ன காரணம் என்பதை அறிய அவரது உடலை பஞ்சகுட்டா போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐபிசி பிரிவு 302 கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் குற்றஞ்சாட்டப்பட்டோரை இப்போது போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ள நிலையில், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+