• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முதல்ல வெங்கடேஷ்.. அப்பறம் ராஜு.. இப்போ 3வதாக சுனில்.. சுஹாசினியின் ஆட்டம்.. கிறுகிறுத்து போன போலீஸ்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தான் ஒரு அனாதை என்று சொல்லியே, 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தையும் சுருட்டிக் கொண்டிய இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நரபுராஜு கன்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார்.. 29 வயதாகிறது.. ஒரு பிரைவேட் பேங்கில் வேலை பார்த்து வந்தார்.

உடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்புஉடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்பு

இவருக்கு சுஹாசினி என்ற பெண் அறிமுகனார்.. ஏடிபி பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் சொன்னார்..

 காதல்வலை

காதல்வலை

நாளடைவில் இந்த நட்பு நெருக்கமானது.. அடுத்த கொஞ்ச நாளில், சுஹாசினியின் காதல் வலையில் விழுந்தார் சுனில்.. தனக்கு அப்பா - அம்மா இல்லை என்றார் சுஹாசினி.. ஒரு அனாதை என்றார்.. இதனால் பரிதாபம் அதிகமாகி, கடந்த டிசம்பரில் சுஹாசினியையே கல்யாணம் செய்து கொண்டார் சுனில்.. ஆதரவற்ற பெண் என்பதால், 3 சவரன் நகைகளையும் சுனிலின் பெற்றோர் வாங்கி தந்தனர்.

மாமா

மாமா

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திடீரென தன்னுடைய மாமா பற்றி சொன்னார் சுஹாசினி.. அந்த மாமாதான் தன்னை சின்ன வயசில் இருந்து வளர்த்து வந்ததாகவும், அவருக்கு இப்போது திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டதால், சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் தேவை என்று சொல்லி, 6 லட்சத்தையும் சுனிலிடம் பெற்றுள்ளார் சுஹாசினி.

 பெற்றோர்

பெற்றோர்

இந்த விஷயம், கடந்த 7 ம் தேதிதான் சுனிலின் பெற்றோருக்கே தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிலின் பெற்றோர், 6 லட்சம் ரூபாயை என்ன செய்தாய் என்று மருமகளிடம் கேட்டனர்.. அவ்வளவுதான்... அதற்கு பிறகு சுஹாசினி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

அட்ரஸ்

அட்ரஸ்

போன் செய்தாலும், ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டிருந்தது.. அதனால், அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் தவித்தனர்.. அப்போதுதான்,சுஹாசினியின் ஆதார் கார்டில் இருந்த அட்ரஸை எடுத்து பார்த்தனர்.. அப்போது இன்னொரு அதிர்ச்சி சுனிலுக்கு காத்திருந்தது.. சுஹாசினியின் வீடுதான் அது.. ஆனால், பல வருடம் முன்னாள் கணவருடன் அந்த வீட்டில் வசித்துள்ளார் என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் சுஹாசினிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பதை சுனில் கண்டுபிடித்து அதிர்ந்துபோய்விட்டார்.. இந்த விஷயம் எல்லாம் சுனிலுக்கு தெரிந்துவிட்டது என்பதை சுஹாசினி அறிந்து கொண்டார்.. அதனால் சுனிலுக்கு போன் செய்து, "நான் இப்போது ஹைதரபாத்தில் இருக்கிறேன்.. 6 லட்சம் ரூபாயை கூடிய சீக்கிரம் தந்துவிடறேன்.. ஆனால் போலீசுக்கு போனால் நடக்கிறதே வேற" என்று சுஹாசினி சுனிலை மிரட்டினார்.

ஷாக்

ஷாக்

அதுமட்டுமல்ல, போனை கட் செய்யும்போது இன்னொரு ஷாக்கையும் சுனிலுக்கு தந்தார் சுஹாசினி.. வெங்கடேஷை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு இன்னொருத்தரை கல்யாணம் செய்து கொண்டேன்.. அவர்தான் முதல் கணவர், வெங்கடேஷ் 2வது கணவர்.. நீ 3வது கணவர்" என்று சொல்லி, சில போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார் சுஹாசினி.

 தப்பியோட்டம்

தப்பியோட்டம்

அதுமட்டுமல்ல, முதல் கணவருக்கு ஒரு பெண் குழந்தை, இரண்டாவது கணவருக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. இந்த விஷயம் போலீஸ் வரை சென்றுள்ளது.. 6 லட்சத்துடன் தலைமறைவான சுஹாசினியை தேடி வருகிறார்கள்.. ஆனால், சுனில் அந்த அதிர்ச்சிக்கு பிறகு, இன்னமும் இயல்பு நிலைமைக்கு திரும்பவே இல்லை..!

English summary
Bank employee who married and cheated three men in Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X