ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரு அண்டா பிரியாணி.. அப்படியே சுடச் சுட மிதந்து போய்! ஏங்கி பார்த்த மக்கள்! வாய்க்கு எட்டாத பரிதாபம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை பெய்ததை அடுத்து ஒரு கடையிலிருந்து இரு பிரியாணி அண்டாக்கள் அடித்துக் கொண்டு செல்லும் காட்சி பிரியாணி பிரியர்களை வேதனைக்குள்ளாக்கியது.

Recommended Video

    இரு அண்டா பிரியாணி.. அப்படியே சுடச் சுட மிதந்து போய்! ஏங்கி பார்த்த மக்கள்! வாய்க்கு எட்டாத பரிதாபம்

    சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் பிரியாணி என்றால் அந்த சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு, முட்டை ஆகியவற்றை கொண்டு சுவையான பிரியாணி தயாரிக்கப்படுகிறது.

    இதற்கு சற்றும் சுவையில் சளைக்காத மஸ்ரூம், பன்னீர், வெஜிடபிள், மீல் மேக்கர் உள்ளிட்டவற்றை கொண்டு சைவ பிரியாணிகளும் தயாரிக்கப்படுகின்றன. எந்த பண்டிகையாக இருந்தாலும் ஹோட்டல் போய் சாப்பிடுவதாக இருந்தாலும் பிரியாணிதான் முதலிடம் பிடிக்கிறது.

    கொட்டித்தீர்த்த கனமழை..மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்..ஸ்தம்பித்த போக்குவரத்து கொட்டித்தீர்த்த கனமழை..மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்..ஸ்தம்பித்த போக்குவரத்து

     ஆங்கில புத்தாண்டு

    ஆங்கில புத்தாண்டு

    ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி மக்களுக்கு விருப்பமான உணவு என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதாவது ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்கள் மூலம் ஆர்டரை கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் டாப் ஃபுட் பிரியாணி என்றே சர்வே முடிவுகள் சொல்கின்றன.

    ஹைதராபாத்

    ஹைதராபாத்

    அப்படிப்பட்ட பிரியாணி ஹைதராபாத்தில் அண்டாவோடு மழையில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம ஹைதராபாத்தில் கனமழை பெய்தது. இதில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. அப்போது இரு பிரியாணி அண்டாக்களில் சுடச்சுட பிரியாணியுடன் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

     பிரியாணி அண்டாக்கள்

    பிரியாணி அண்டாக்கள்

    இந்த பிரியாணி அண்டாக்கள் அருகே உள்ல அதிபா எனும் ஹோட்டலில் இருந்து அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் அந்த வீடியோவில் ஆட்கள் இருக்கும் நிலையில் பிரியாணி அண்டாவை பிடிக்காதது ஏன் என தெரியவில்லை. ஒரு வேளை அவர்களுக்கே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டதா. இல்லை வேறு கடையினுடையதா என தெரியவில்லை.

    பிரியாணி

    பிரியாணி

    எதுவாக இருந்தாலும் அந்த கடையில் பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டு வீட்டுக்கு வரும் மழைக்கு இதமாக சுடச்சுட "இன்னைக்கு ஒரு புடி" புடிக்கலாம் என காத்திருந்த உணவு பிரியர்கள் ஏமாற்றமடைந்திருப்பர். போன் செய்து சம்பந்தப்பட்ட ஹோட்டல்களை எத்தனை பேர் வசைப்பாடினார்களோ தெரியவில்லை. இந்த பிரியாணி இத்தனை ஃபாஸ்ட்டாக சென்று எங்கு டெலிவரி ஆச்சுன்னுதான் தெரியவில்லை. டெலிவரி ஆனவங்களுக்கு சந்தோஷம்தான். தெலுங்கானாவில் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Briyani handis washed away by rain water with briyani in Hyderabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X