உஷார்.. யூடியூபர் நிலைமையை பாருங்க.. மயில் கறி சமைத்து வசமாக சிக்கினார்
ஹைதராபாத்: தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேசியப் பறவையான மயிலைக் கொல்வது சட்டவிரோதம் என்பதால், குற்றத்தை உறுதி செய்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபலமடைவதற்காகவும், லைக்ஸ்களை குவிப்பதற்காகவும் விதவிதமான ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யூடியூபை திறந்தாலே சமையல் வீடியோக்களுக்கு பஞ்சம் இருக்காது. சமைக்கிறோம், ருசிக்கிறோம், இன்னைக்கு ஒரு புடி.. இன்னைக்கென்ன சமையல் என டிசைன் டிசைனாக சமையல் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு பொதுமக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உள்ளது.

பார்வையாளர்களைக் கவர்வதற்காக வித்தியாசமாகவும், புதுமையாகவும் சமையல் செய்யும் யூடியூபர்கள் சில சமயம் சிக்கலில் சிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது தெலங்கானாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் மயில் கறி சமைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது பிரணாய் டிரெடிஷனல் மயில் கறி என்ற பெயரில் மயில் கறியை சமைத்து அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசியப் பறவையான மயிலைக் கொல்வது சட்டப்படி குற்றம். இதன் காரணமாக பிரணாய் மீது தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரணாய் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்கவுள்ளதாக சிர்சில்லா மாவட்ட எஸ்.பி.ராஜண்ணா கூறியுள்ளார்.
இச்சம்பவம் பூதாகரமாய் மாறியதையடுத்து மயில் கறி வீடியோ பதிவை பிரணாய் தனது யூடியூப் சேனலில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளார். இதற்கு முன்னர் இவர் காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மயில் கறி வீடியோவை பிரணாய் நீக்கியிருப்பினும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications