செம கெத்து.. சந்திரசேகர் ராவையே வீழ்த்திய பாஜக வேட்பாளர்! காங்கிரஸ் ரேவந்த் ரெட்டியும் தோல்வி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காமரெட்டி தொகுதியில் முதல்வர் சந்திரசேகர் ராவையும், காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி பாஜக வேட்பாளர் வெங்கடரமணா வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் காமரெட்டி மற்றும் கஜ்வெல் தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் காமரெட்டி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி களமிறங்கினார். பாஜக சார்பில் வெங்கட ரமணா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

 CM Chandrasekar Rao and Congress Chief Revanth Reddy defeated by BJP Candidate Venkata Ramana in Kamareddy

இந்த தொகுதியில் தொடக்கம் முதலே சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்தார். ரேவந்த் ரெட்டி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் டிரெண்ட் மாறியது. பாஜகவின் வெங்கட ரமணா வெற்றி பெற்றார். அதாவது பிஆர்எஸ் வேட்பாளரான சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவரும், காங்கிரஸின் முதல்வர் ரேஸில் முன்னனியி இருப்பவருமான ரேவந்த் ரெட்டியை வீழ்த்த வெங்கட ரமணா கெத்து காட்டியுள்ளார்.

இருப்பினும் ரேவந்த் ரெட்டி தனது 2வது தொகுதியான கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மாறாக சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட கஜ்வெல் தொகுதியில் முன்னிலையில் இருந்தாலும் கூட இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதனால் சந்திரசேகர் ராவ் ஒரு தொகுதியிலாவது வெல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+