தாமரைக்கு தான் ஓட்டு..பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட காங்கிரஸ் வேட்பாளர்.. பஞ்சாயத்து செய்யும் பாஜக
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி தாமரைக்கு வாக்களிப்பேன் என சொன்ன மூதாட்டியின் கன்னத்தில் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்டோரும் அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
லோக் சபா தேர்தல் 2024: லோக் சபா தேர்தல் வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி 7 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் 17 எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்: 13ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ்- பிஆர்எஸ் -பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான ஜீவன் ரெட்டி ஆர்மூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தாமரைக்கு வாக்கு: அப்போது ஒரு பெண்ணிடம் இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார். அப்போது அந்த பெண் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தான் வாக்கு போட்டேன். ஆனால் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை அதனால் இந்த தேர்தலில் நான் தாமரை சின்னத்திற்கு ஓட்டு போடப் போகிறேன் என்றார்.
கன்னத்தில் பளார்: இதனை கேட்டதும் ஆத்திரம் அடைந்த ஜீவன் ரெட்டி அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுதான் பெண்களை காங்கிரஸ் நடத்தும் முறையா என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications