பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ரூ2,500- தெலுங்கானா தேர்தல் அறிக்கை- காங். அதிரடி வாக்குறுதி!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் ரூ2,500 உதவித் தொகை வழங்கப்படும்; பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.

இத்தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ2,500 உதவித் தொகை வழங்கப்படும்; ரூ500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்; பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்.
Rythu Bharosa திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும் குத்தகைதாரர்களுக்கும் ஏக்கருக்கு ரூ15,000 நிதி உதவி வழங்கப்படும்; விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000 வழங்கப்படும்; ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
Gruha Jyothi திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
Indiramma Indlu திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்; தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக போராடிய தியாகிகளுக்கு 250 சதுர அடி வீட்டு மனை இலவசமாக வழங்கப்படும்.
Yuva Vikasam திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ5 லட்சம் நிதி உதவிக்கான Vidya Bharosa Card வழங்கப்படும். தெலுங்கானாவின் ஒவ்வொரு மண்டலிலும் இண்டர்நேஷனல் ஸ்கூல் கட்டப்படும்.
Cheyutha திட்டத்தின் கீழ் முதியோர், விதவை பெண்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ4,000 வழங்கப்படும். திட்டத்தின் கீழ் ரூ10 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஊதியத் தொகை ரூ18,000 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி ஆசிரியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications