இந்த லைட்டை வீட்டில் பொருத்தினால் போதும்.. கொரோனா காலி? ஹைதராபாத் நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு!
ஹைதராபாத்: கொரோனா வைரஸ்களை காற்றில் கொல்லும் திறன் கொண்ட லைட் ஒன்றை ஹைதராபத்தாஹ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. செல்லுலார் மூலக்கூறு உயிரியல் மையம் இந்த லைட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.
ஹைதராபாத்தில் சமீபத்தில் பொது சுகாதாரத்திற்கான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், சுகாதாரம், மருத்துவம் தொடர்பான கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
முக்கியமாக கொரோனா காலம் என்பதால் கொரோனாவில் இருந்து பாதுகாக்க புதிய வகை மாஸ்க், கையுறை என்று பல கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அறிமுகம்
அந்த வகையில்தான் கொரோனா வைரஸ்களை காற்றில் கொல்லும் திறன் கொண்ட லைட் ஒன்றை ஹைதராபத்தாஹ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இண்டஸ் என்ற தனியார் நிறுவனம் இந்த லைட்டை கண்டுபிடிப்பட்டுள்ளது. யுவி லைட் வகையை சேர்ந்த இதில் சில மாற்றங்களை செய்து உருவாக்கி உள்ளனர்.

என்ன செய்யும்
செல்லுலார் மூலக்கூறு உயிரியல் மையம் இந்த லைட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. காற்றில் இருக்கும் 95 சதவிகிதம் கொரோனா வைரஸை இது கொல்லும். அதிலும் 60 நிமிடத்தில் இது கொல்லும் என்று செல்லுலார் மூலக்கூறு உயிரியல் மையமான Centre for Cellular Molecular Biology தெரிவித்துள்ளது.

அனுமதி
Centre for Cellular Molecular Biology நிறுவனத்தின் அனுமதியை தொடர்ந்து இந்த லைட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. காற்றில் இருக்கும் கிருமிகளின் செயல்பாட்டை 60 நிமிடம் 80 சதவிகிதம் வரை குறைக்கும் திறன் கொண்டது இது. ஆய்வக சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை விலக்கு போல பயன்படுத்தலாம். அதே சமயம் இதில் இருந்து ஜெர்மிஸிடல் என்ற பவுடர் காற்றில் கலக்கும்.

கொல்லும்
இதற்கு ரே ப்யூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுதான் கிருமிகளை கொல்லும். ஆனால் இது மனிதர்களுக்கு பாதுகாப்பானது. இதில் இருந்து சத்தம் வராது. எளிதாக பயன்படுத்த முடியும். இதன் விலையும் குறைவு .யு.வி விளக்குகளில் இருக்கும் carcinogenic என்ற நச்சுப்பொருள் இதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இது வீட்டில் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது.

உண்மையா?
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லுலார் மூலக்கூறு உயிரியல் மையம் ரே ப்யூர் விளக்கிற்கு அனுமதி அளித்துள்ளதால் இதன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ரே ப்யூர் லைட் எப்படி செயல்படுகிறது. எந்த அளவிற்கு கொரோனாவிற்கு எதிராக செயல்படுகிறது என்பது மக்கள் பயன்பாட்டிற்கு பின்பே தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
