எம்புட்டு குரோதம்...மருமகளை கட்டிபிடித்து கொரோனாவை ஒட்ட வைத்து வீட்டை விட்டும் துரத்தினய மாமியார்!
ஹைதராபாத்:தெலுங்கானாவில் மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை ஒட்ட வைத்துவிட்டு அதையே காரணமாக சொல்லி அவரை வீட்டை விட்டே துரத்திய மாமியாரின் கொடுமை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானாவின் ராஜன்னா சர்சில்லா மாவட்டம் திம்மாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

கட்டிபிடித்து கொரோனா ஒட்ட வைப்பு
ஆனால் அந்த பெண் வீட்டில் சும்மா இருக்காமல் மருமகளையும் அவரது குழந்தைகளையும் அடிக்கடி கட்டிப் பிடித்தபடியே பேசி வந்திருக்கிறார். இதனால் மருமகளுக்கும் அவரது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.

மருமகளை துரத்திய மாமியார்
இதனையடுத்து கொரோனா வந்த மருமகளுக்கு இனி வீட்டில் இடம்கிடையாது என அவரது பெற்றோர் வீட்டுக்கு மாமியார் அடித்து துரத்தியிருக்கிறார். ஒடிஷாவில் ஒப்பந்த வேலைபார்த்து வந்த மகனிடம் இந்த தகவலை சொல்லி இருக்கிறார் அந்த பெண். மனைவியை வீட்டை விட்டு துரத்திய தாயை கண்டிக்காமல் மகனும் இருந்துள்ளார்.

மாமியார் மீது போலீசில் புகார்
இது தொடர்பாக தற்போது போலீசில் அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், மாமியார் திடீரென பாசத்துடன் கட்டிபிடிக்கிறாரே என நினைத்தேன்.. ஆனால் அவருக்கு வந்த கொரோனா எங்களுக்கும் வர வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன்தான் இவ்வாறு அடிக்கடி செய்திருக்கிறார் என்பது பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.

குமுறல் பேச்சு- வீடியோ வைரல்
இப்போது கொரோனாவை காரணம் காட்டியே வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளோம். மாமியார் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் மாமியாரின் இந்த கொடூர புத்தி தொடர்பாக அந்த பெண் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications