அர்த்தராத்திரியில் அலறிய அக்கா.. பக்கத்துலயே தங்கச்சி + காதலன்.. சோபாவில் "சாய்த்து"விட்டு கொடூரம்
ஹைதராபாத்: அக்கா - தங்கை - தங்கையின் காதலன் என 3 பேருக்கும் தகராறு வெடித்துள்ளது.. இதனால், அர்த்தராத்திரியில் நடந்த சம்பவம், தெலுங்கானாவை அதிர வைத்து வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி... 22 வயதாகிறது.. இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.. இவருடைய தங்கை பெயர் சந்தனா.. இவருக்கு 20 வயதாகிறது.

கடந்த 28ம்தேதி இவர்களது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டார்கள். அதனால், தீப்தியும் சந்தனாவும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்கள்.. மறுநாளே, தீப்தி வீட்டில் சடலமாக விழுந்து கிடந்தார்.. ஆனால், சந்தனாவை காணவில்லை. வீட்டிலிருந்த 70 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் பணம் போன்றவை மாயமாகி இருந்தது.
விசாரணை: இதுகுறித்து ஜகிர்த்தியாலா போலீசார், தீப்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் துவங்கினர். தீப்தியின் மர்ம மரணமும், சந்தனா மாயமானதும், பெருத்த குழப்பத்தை போலீசாருக்கு ஏற்படுத்தியது. அந்த நேரத்தில்தான், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.
அதில் தீப்தி கழுத்து நரம்புகள் முறிந்திருந்ததாகவும், கழுத்தை நெரித்து, மூச்சுத்திணற வைத்து கொலை செய்யப்பட்டதாகவும், கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தனாவின் மீது மொத்த கவனமும் போலீசாருக்கு திரும்பியது.. அவரை வலைவீசி தேட துவங்கினர்.. இந்த கொலை நடந்த தினத்தில், ஜகிர்த்தியாலா பஸ் ஸ்டாண்டிற்குள், இளைஞர் ஒருவருடன் சந்தனா நடந்து சென்று கொண்டிருப்பது, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
அடையாளங்கள்: இந்த அடையாளங்களை வைத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இறுதியில், ஐதராபாத்தில் உள்ள ஆர்மூர் பகுதியில் சந்தனாவும், அந்த இளைஞரும் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்து, அங்கேயே அவர்களை கைது செய்து, விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டுவந்தனர்.
அப்போதுதான், நடந்த சம்பவத்தையெல்லாம் கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.. சந்தனாவுடன் பதுங்கியிருந்த அந்த இளைஞர், சந்தனாவின் காதலனாம்.. அவர் பெயர் உமர்ஷேக்.. 21 வயதாகிறது. சந்தனாவும், உமர்ஷேக்கும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.. இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. எப்படியும் வீட்டில் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால், வீட்டை விட்டு ஓடிச்செல்ல சந்தனா முடிவு செய்திருக்கிறார்.
பெரிய திட்டம்: சந்தனாவின் பெற்றோர், 28ம்தேதி வெளியூருக்கு செல்லவிருப்பதால், அந்த நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறவும் திட்டமிட்டிருக்கிறார்.. ஆனால், இந்த விஷயத்தை உமர்ஷேக்கிடம் சொல்லவில்லை.. சம்பவத்தன்று இரவு, திடீரென உமர்ஷேக்குக்கு போனை போட்டு வீட்டுக்கு வரவழைத்தார் சந்தனா.. அப்போது, இதுதான் சமயம், எங்காவது ஓடிப்போய்விடலாம் என்று சந்தனா சொல்லி உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன உமர்ஷேக், நாம இப்போதுதான் காலேஜ் படித்து கொண்டிருக்கிறோம். 2 பேருக்குமே இன்னும் வேலை கிடைக்கவில்லை.. வேலைக்கு போய், கொஞ்சமாவது சம்பாதித்துவிட்டு, அதற்கு பிறகு, கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சந்தனா, அதை ஏற்கவில்லை.. உடனே கல்யாணம் செய்தாக வேண்டும் என்று தகராறு செய்துள்ளார்..
நகை, பணம்: "உனக்கு பணம் தானே பிரச்சனை? வீட்டில், நகை பணம் இருக்கிறது.. அதை வைத்துக் கொண்டு பிழைத்துவிடலாம். என் அக்கா தூங்கட்டும்.. அவள் தூங்கியபிறகு, நகை, பணத்துடன் வெளியேறி விடலாம்' என்று கட்டாயப்படுத்தி, காதலனை சம்மதிக்க வைத்துள்ளார் சந்தனா.
இது எதுவுமே தெரியாத, தீப்தி, வழக்கம்போல் தூங்கச்சென்றுள்ளார். அதுவரை நோட்டமிட்டு கொண்டிருந்த சந்தனா, உடனடியாக காதலனை வீட்டுக்குள் வரவழைத்துள்ளார்.. நேராக பீரோவில் இருந்த 70 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றை இருவருமே கொள்ளையடித்து கொண்டு, எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது திடீரென சத்தம் கேட்கவும், தீப்தி கண்விழித்து பார்த்தார்.
அர்த்தராத்திரி: அங்கே, தன்னுடைய தங்கையுடன் இளைஞர் ஒருவர் அர்த்தராத்திரியில் நின்றுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.. அவர்களது கையில், நகை, பணம் இருப்பதை பார்த்து, அதற்கு மேல் அதிர்ச்சியடைந்தார்.. இதுகுறித்து சந்தனாவிடம் தீப்தி கேட்டபோதுதான், அந்த இளைஞர், தங்கையின் காதலன் என்பதும், 2 பேரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளவிருப்பதும் தெரியவந்தது..
இதனால், ஆத்திரமடைந்த தீப்தி, இந்த கல்யாணத்துக்கு நம்முடைய அம்மா, அப்பா சம்மதிக்க மாட்டார்கள்.. அதனால், 2 பேருமே இந்த காதலை கைவிடுங்கள், முதலில் படிக்கிற வேலையை பாருங்கள் என்று சொல்லி, அவர்களிடமிருந்த நகை, பணத்தை பறிக்க முயன்றார். இதனால் 3 பேருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.. ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த காதலர்கள், தீப்தியை சரமாரியாக அடிக்க துவங்கிவிட்டனர்.. அவரது துப்பட்டாவால் அவரது கழுத்தையும் நெரித்து, பெட்ரூமுக்குள்ளேயே தள்ளியிருக்கிறார்கள்..
துப்பட்டா மரணம்: அதே துப்பட்டாவில் உயிர் போகும்வரை, துப்பட்டாவாலேயே இருவரும் நெரித்துள்ளனர்.. இதில், கழுத்து எலும்புகள் நொறுங்கி இறந்துபோனார் தீப்தி.. ஆனால், இந்த மரணம், இயற்கையாக நடந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக, தீப்தியின் சடலத்தை ஷோபாவில் உட்கார வைத்துவிட்டு, காதல் ஜோடி தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இப்போது, இந்த ஜோடி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது..
ஆனால், இந்த கொலையையும் செய்துவிட்டு, கொலையாளிகளுக்கு அடைக்கலமும் தந்திருக்கிறார் உமர்ஷேக்கின் அம்மா சையத்அலியா... இவருக்கு உறவினர்கள் ஷேக்அசியாபாத்திமா, அபீஸ் என்பவர்களும் உடந்தையாகி இருந்திருக்கிறார்கள். இப்போது, மொத்தம் 5 பேரும் கைதாகி உள்ளார்கள்.. இவர்களிடம் இருந்து 1.20 லட்சம் ரூபாய் பணம், 70 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..
அதிர்ச்சி சம்பவம்: மூச்சுத்திணறி திணறி உயிரிழந்துள்ள தீப்தியின் சடலத்தை கண்டு, அவரது பெற்றோர் கதறியழுந்தது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. 20 வயது காதலியும், 21 வயது காதலனும் சேர்ந்து ஒரு அப்பாவி உயிரை பறித்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம், சந்தனாவின் தலைக்கேறிய காதல்வெறிதான் என்கிறார்கள்..!!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications