தெலங்கானா ஹெலிகாப்டர் விபத்து - தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உடல் கருகி பலி
தெலங்கானா மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. இதில் தமிழக பெண் விமானி உள்பட 2 விமானிகள் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து தெலுங்கானாவிற்கு பறந்து சென்றது.

அப்போது, நல்கொண்டா மாவட்டம் கிருஷ்ணா நதியின் நாகார்ஜுனசாகர் அணைக்கு அருகில் உள்ள கிராமத்தில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த தமிழக விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த பயிற்சி விமானியின் உடலை மீட்டு பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் தமிழகத்தைச் சேர்ந்த மஹிமா, எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தீ எரிந்து கொண்டிருப்பதால் புகை மூட்டமாக காணப்படுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும் தீயணைப்பு மீட்பு படையினரும் விரைந்துள்ளனர். வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விவசாய நிலங்களில் இருந்த உயர் அழுத்த மின் கம்பிகளில் ஹெலிகாப்டர் மோதியது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய போது பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications