10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டி.. விடாமல் நடந்த கொடூரம்.. கிளாஸ்மேட்ஸ் கைது
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பள்ளி மாணவியை 5 மாணவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பார்ட்டிக்கு சென்ற பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 இளம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பார்ட்டி முடித்துவிட்டு திரும்பி சென்ற அந்த மாணவியை டிராப் செய்வதாக கூறி, மெர்சிடஸ் காரில் சென்ற அழைத்து சென்ற 4 மாணவர்களும் அந்த மாணவியிடம் சில்மிஷங்களை செய்துள்ளனர்.

பலாத்காரம்
மாறி மாறி அந்த பெண்ணை முத்தமிட்டுள்ளனர். அதோடு அதை வீடியோவும் எடுத்துள்ளனர். நான்கு மாணவர்களுக்கும் இடையில் சில மோதல் இருந்ததால், எதிர்காலத்தில் தங்களுக்கு உள்ளாகவே மிரட்டிக்கொள்ள வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் கேன்கு பேக்கரி என்ற பகுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்று, அவரை இன்னோவா காரில் ஏற்றி உள்ளனர். மற்றவர்கள் இறங்கிவிட, (எம்எல்ஏ மகன் இன்னோவா காரில் செல்லவில்லை), 5 பேர் அந்த மாணவியை ஏற்றுக்கொண்டு பெட்டம்மா கோவில் என்ற பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

என்ன நடந்தது?
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹைதராபாத்தில் இன்னொரு கொடூர சம்பவம் நடந்து உள்ளது. பள்ளி மாணவி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், 5 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஹயாத்நகர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே பள்ளியை சேர்ந்தவர்கள். சிலர் 9ம் வகுப்பும், சிலர் 10ம் வகுப்பும் படிக்கின்றனர். மாணவி 10ம் வகுப்பு படிக்கிறார்.

மாணவி
அந்த மாணவி இந்த 5 மாணவர்களுடனும் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் இவர்கள் 5 பேரும் அடிக்கடி பாப்கார்ன் வீடியோக்கள் பார்ப்பது, பெண்களை பற்றியே பேசிக்கொண்டு இருப்பது, பாலியல் எண்ணங்களுடன் இருப்பது என்று சுற்றி உள்ளனர். அந்த மாணவி தங்களிடம் பேசுவதை பயன்படுத்திக்கொண்டு அவரை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். கடந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அவரின் வீட்டிற்கு 5 பேரும் சென்றுள்ளனர். அங்கேயே மாணவியை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்துள்ளனர்.

நட்பாக பழக்கம்
இந்த வீடியோவை வைத்து மீண்டும் மீண்டும் அந்த மாணவியை மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை பணத்திற்காக இணையத்தில் விற்றுள்ளனர். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் கொடுத்து.. பள்ளியில் அந்த மாணவி பற்றி பேசி உள்ளனர். இவர்கள் 5 பேரும் இப்படி மாறி மாறி வன்புணர்வு செய்த நிலையில் கடந்த திங்கள் கிழமை அந்த மாணவி இதை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி நேற்று குற்றவாளிகளை கைது செய்தனர். குற்றவாளிகளின் போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 5 பேருமே இதில் சிறார்கள். இதனால் இவர்களை போலீசார் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தை இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications