அமெரிக்கா விசா நிராகரிப்பு.. விரக்தியில் பெண் மருத்துவர் எடுத்த முடிவு! கண்ணீரில் குடும்பத்தினர்
ஹைதராபாத்: டிரம்ப் வந்த பிறகு அமெரிக்க விசாவுக்கான கட்டுப்பாடுகள் பல மடங்கு அதிகரித்துவிட்டது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அமெரிக்க விசா கிடைக்காததால் மன உளைச்சலில் மருத்துவர் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தில் வசித்து வந்த அந்த மருத்துவர் விசா கிடைக்காத விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க விசா கிடைப்பதில் கெடுபிடி இருக்கிறது. விசா கோரி விண்ணப்பிப்போரிடம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார்கள். உரியக் காரணமே இல்லாமலும் கூட பல விசாக்கள் நிராகரிக்கப்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

விபரீதம்
அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த பெண் மருத்துவர் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார். அவர் அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார்.
இருப்பினும், சில காரணங்களால் அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் வேதனையடைந்த அந்த பெண் மருத்துவர் ஹைதராபாத்தில் உள்ள பத்ம ராவ் நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிக்கிழமை இரவு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறுநாள் அவரது வீட்டிற்கு வேலைக்குச் சென்ற பணிப்பெண் நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியுள்ளார். இருப்பினும், கதவைத் திறக்காததால் அந்த ஊழியர், பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது
ஹைதராபாத்திலேயே வேறு ஒரு பகுதியில் அவர்களின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். பத்ம ராவ் நகர் வீட்டிற்கு விரைந்து சென்ற குடும்பத்தினர், கதவைத் திறக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அது உள்பக்கம் லாக் ஆகி இருந்துள்ளது. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது பெண் மருத்துவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
உயிரிழந்த அந்த பெண் மருத்துவரின் பெயர் ரோகிணி. அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு அல்லது ஊசி போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோகிணி உடலை மீட்ட போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன் மருத்துவர் ரோகிணியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவரது மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை கடிதம்
ரோகணியின் வீட்டில் சோதனை செய்த போது போலீசாருக்கு தற்கொலை கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் அமெரிக்காவுக்கான விசா நிராகரிக்கப்பட்டதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக்க குறிப்பிட்டுள்ளார்..போலீசார் விசாரித்ததில் நூலகங்கள் அருகில் இருந்ததால்.. ரோகிணி இந்த பகுதியில் தனியாக வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இருப்பினும், விசா நிராகரிப்பால் வேதனையில் இருந்த அவர், இந்த மோசமான முடிவை எடுத்துள்ளார்.
தாய் சொல்வது என்ன
இது தொடர்பாக ரோகிணி தாயார் லட்சுமி கூறுகையில், "என் மகள் அமெரிக்காவுக்கு செல்ல ஆர்வமாக இருந்தார். அங்கு வேலையில் சேர வேண்டும் என விரும்பினார். ஆனால் விசா மறுக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் ஒரு சிறந்த மாணவி. கிர்கிஸ்தானில் அவர் மருத்துவ பட்டம் பெற்றிருந்தார். சிறந்த மருத்துவராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.
இந்தியாவிலேயே இருக்கலாமே என நான் சொல்வேன். ஆனால், அமெரிக்கா சென்றால் ஊதியம் அதிகமாகக் கிடைக்கும். தினசரி பார்க்க வேண்டிய நோயாளிகளும் குறைவு என்பதால் மன அழுத்தம் இருக்காது என என்னிடம் சொல்வார். ஆனால் விசா நிராகரிக்கப்பட்ட உடன் ரோகணியால் அதை ஏற்க முடியவில்லை. மன உளைச்சல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களில் நிலைமை மோசமடைந்தது" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications