ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதார் ஜெராக்ஸில் எழுதி தந்த கொரோனா ரிப்போர்ட்.. சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பு.. தாய் மரணம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா உறுதி என்ற சான்றிதழ் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஹைதராபாத்தில் மகன் ஒருவர் தாயை தாயை இழந்த மகன் தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (26). இவரது தாய் ஜெயம்மாள். இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதார நிலையம்

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெயம்மாளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆதார் கார்டின் நகலில் கொரோனா பாசிட்டிவ் என எழுதி கொடுத்தனரே தவிர கொரோனா உறுதியானதற்கான மருத்துவ அறிக்கையோ எஸ்எம்எஸ்ஸோ வரவில்லை.

உறுதி

உறுதி

இதையடுத்து சிகிச்சைக்காக காந்தி மருத்துவமனைக்கு தனது தாயை அழைத்து சென்றார் பிரதீப். அங்கு கொரோனா உறுதி செய்ததற்கான முறையான சான்று இல்லாததால் ஜெயம்மாளை அனுமதிக்க முயன்றனர். உதவியின்றி தனித்துவிடப்பட்ட பிரதீப் தனது தாயை ஆம்புலன்ஸில் படுக்க வைத்துவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

அதில் தனது தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரது உயிரை காக்க மருத்துவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்றும் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்ததில் ஜெயம்மாள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துவிட்டார்.

பாதுகாப்பு கவசங்கள்

பாதுகாப்பு கவசங்கள்

இதையுட்து வீட்டுக்கு கொண்டு சென்ற அவரது உடலை அடக்கம் செய்ய சுகாதாரத் துறையினர் வந்தனர். அவர்கள் ஜெயம்மாளின் உடலை ஒரு துணியில் தூக்கிக் கொண்டு ஜேசிபி வாகனத்தில் கிடத்தினர். அவ்வாறு வந்த சுகாதாரத் துறையினர் ஒருவரும் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

இதுகுறித்து ஐடிஐ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரதீப் கூறுகையில் தனது தாய் 50 பேர் கலந்து கொண்ட ஒரு கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

என்னை போல் யாரும் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கக் கூடாது. நடுத்தர குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உதவ யாரும் முன்வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் RIP Society என வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Hyderabad Youth puts status in whatsapp "RIP Society" after his mother died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X