கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 வயது சிறுவனை அடித்தே கொலை செய்த தாய்.. போலீஸார் ஷாக்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ளதா கருதி 3 வயது மகனை பெற்ற தாயே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அந்த இளம் பெண்ணையும், உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் ஹைதரபாத் ஜீடிமெட்லா கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவில்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஹைதராபத்த்தில் உள்ள ஜீடிமெட்டில பகுதியை சேர்ந்தவர் உதயா (24 வயது). இவரை சுரேஷ் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உமேஷ் என்ற 3வயது குழந்தை இருந்தான்.

கணவனை பிரிந்தார்
இந்நிலையில் கணவர் சுரேஷ் உடன் உதயாவிற்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு உதயா தனது மகனுடன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். கணவனை பிரிந்து வாழும் உதயா தனது 3வயது மகனுடன் ஜிமெட்டிலா பகுதியில் வசித்து வந்தார்.

தனி அறை எடுத்தனர்
கணவனை பிரிந்த தனிமையில் வசித்து வந்த உதயாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாஸ்கரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து. ஜீடிமெட்லாவில் உள்ள பகத்சிங் நகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசிக்க தொடங்கினார்கள். திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்துள்ளார்கள்,.

குழந்தையை பார்க்க
இதனிடையே தனது கணவர் சுரேஷ், மகன் உமேஷை பார்க்க விரும்புப்போது மட்டும் உதயா, தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று மகனை அழைத்து சென்று காட்டி வந்துள்ளார். மகனை சுரேஷ் சந்தித்த பிறகு மீண்டும் வீட்டிற்கு பாஸ்கரனை தேடி வந்துவிடுவார்.

கொடூர தாக்குதல்
இப்படி சென்று கொண்டிருந்த கள்ளக்காதலுக்கு சிறுவன் உமேஷ் இடையூறாக இருப்பான் என்று உதயாவும் அவரது கள்ளக்காதலன் பாஸ்கரனும் கருதினர். இதனால் சிறுவனை கொல்ல முடிவு செய்தனர். இதையடுத்து உதயாவும், அவரது கள்ளக்காதலன் பாஸ்கரனும் சேர்ந்து பச்சிளம் பாலகன் உமேஷை கடுமையாக தாக்கினர். மயக்கமடைந்த சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தாய், கள்ளக்காதலன் கைது
.ஆனால் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்தான். இது பற்றிய தகவல் அறிந்த சிறுவனின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜீடிமெட்லா போலீசார் உதயாவையும் அவரது கள்ளக்காதலன் பாஸ்கரன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கருதி 3வயது குழந்தையை பெற்ற தாயே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications