‛‛கள்ளக்காதலியுடன் உல்லாசம்’’.. மகனுடன் திடீர் என்ட்ரி கொடுத்த மனைவி.. களேபரமான வீடு
ஹைதராபாத்: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை கையும், களவுமாக பிடித்த மனைவி அவரை மகனுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. குமாருக்கு 3 குழந்தைகள் பிறந்தன. குமார் தனியாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் குமார் சில பெண்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் குமாரை பிரிந்து அவரது மனைவி தனது குழந்தைகளுடன் தனியே வசிக்க தொடங்கி உள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட குமார் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்ணுடன் இன்னும் நெருக்கமாக பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. மனைவி தன்னுடன் இல்லாததால் குமார் கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி கள்ளக்காதலிக்கு அவர் தனியே அம்பர்பேட்டை பகுதியில் வீடு எடுத்து கொடுத்து தங்க வைத்துள்ளார். அந்த வீட்டுக்கு அடிக்கடி குமார் சென்று வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே தான் சம்பவத்தன்று குமார் தனது கள்ளக்காதலியுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த குமாரின் மனைவி தனது மகனை அழைத்து கொண்டு அந்த வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவை குமாரின் கள்ளக்காதலி திறந்துள்ளார். வீட்டில் குமார் இருப்பதை உறுதி செய்த அவரது மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். கணவரின் கள்ளக்காதலியை அவர் தாக்கினார். இதனால் கோபமான குமார் தனது மனைவியை துரத்தி துரத்தி அடித்துள்ளார். தடுக்க போன மகனையும் அவர் தாக்கினார்.
இதையடுத்து மனைவி மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து குமாரை தாக்கினர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து வீட்டில் நடந்த களேபரம் முடிவுக்கு வந்தது. மேலும் குமார் உள்ளிட்டவர்களை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தான் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவர் குமாரிடம் அவரது மனைவி வாக்குவாதம் செய்ததும், மனைவியை குமார் தாக்கியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications