சுட்டெரிக்கும் வெயில்! மாணவர்களை பாதுகாக்க.. அரை நாள் மட்டுமே பள்ளி! தெலங்கானா அரசு அறிவிப்பு
ஹைதராபாத்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தெலங்கானா மாநிலத்தில் பள்ளிகள் அரை நாள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனை உறுதி செய்யும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என தென் மாநிலங்களை வெயில் ஒரு கை பார்த்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் அதிக வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டுவிட்டன. எனவே 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

கேரளாவில் நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்க, தெலங்கானா அரசு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி, மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரை அரை நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவித்திருக்கிறது. அதாவது காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அரை நாள் மட்டும் பள்ளிகள் செயல்பட்டாலும், மதிய உணவு வழக்கம்போல வழங்கப்படும் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கோடை வெயிலுக்கு முன்னதாக பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 21ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 4ம் தேதியும் முடிவடையும் வகையில் பள்ளிக்கல்வித்துறை தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மறுபுறம், விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள் அதிக அளவில் நடைபெற வாய்ப்பிருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் மக்கள் வெயில் பாதிப்பிலிருந்து தங்களை உரிய முறையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications