விண்வெளி திட்டத்தில் புதிய சாதனை படைக்கும் இஸ்ரோ.. பிஎஸ்எல்விசி-60.. சிறப்புகள் என்னென்ன?
ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் முன்னோட்ட திட்டத்திற்காக பிஎஸ் எல்வி சி60 ராக்கெட் இன்று இரவு 10.00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் ஏவும் திட்டம் ஏன் முக்கியத்துவமானது? அதில் உள்ள சிறப்பமசங்கள் உள்ளன? என்பது பற்றி பார்க்கலாம்.
தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணைய செய்வதற்கான இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். ஸ்பேடெக்ஸ் விண்கலத்தில் லேசர் ரேஞ்சர் ஃபைண்டர், ரெண்டெஸ்வியூஸ் சென்சர் மெக்கானிசம், வீடியோ மானிட்டர், நிகழ் நேர பட பதிவு ஆகியவைகளும் உள்ளன.

ககன்யான் திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு நிகராக இந்தியா சாதித்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங்க் செய்து வேறு எந்த நாடும் செய்யாத சாதனை படைத்து உலக நாடுகளை இந்தியா திரும்பி பார்க்க வைத்தது.
🎉 Launch Day is Here! 🚀
— ISRO (@isro) December 30, 2024
Tonight at precisely 10:00:15 PM, PSLV-C60 with SpaDeX and innovative payloads are set for liftoff.
SpaDeX (Space Docking Experiment) is a pioneering mission to establish India's capability in orbital docking, a key technology for future human… pic.twitter.com/147ywcLP0f
தற்போது, புதிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்தல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் ஆகியவற்றை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. அதிலும், இந்தியாவிற்கு பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்து இருக்கிறது.
என்னென்ன சிறப்புகள்
”பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு 2035ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஓர் அங்கமாக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என இரண்டு விண்கலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்டில் இருந்து இன்று இரவு 10.00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்பெடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்படும். பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் உள்ளன.
நிகழ் நேர பட பதிவு
ராக்கெட்டின் போயம்-4( poem) எனப்படும் 4-ஆ நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும். இதில் 14 ஆய்வுக் கருவிகள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்தது. மீதமுள்ள 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தன். இந்த பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட், 'ஸ்பெடெக்ஸ் - ஏ', 'ஸ்பெடெக்ஸ் - பி' என இரண்டு செயற்கை கோள்கைகளை சுமந்து செல்கிறது. இவற்றின் எடை தலா 220 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு விண்கலன்களும் நிலை நிறுத்தப்பட உள்ளன.
ஸ்பேடெக்ஸ் விண்கலத்தில் லேசர் ரேஞ்சர் ஃபைண்டர், ரெண்டெஸ்வியூஸ் சென்சர் மெக்கானிசம், வீடியோ மானிட்டர், நிகழ் நேர பட பதிவு ஆகியவைகளும் உள்ளன. இவை விண்கலன்களை நிறுத்துவதற்கான சென்சார்களுக்கு உதவும். இதில் உள்ள பவர் சிஸ்டம்ஸ் சோலார் மூலமாக 528 வாட்ஸ் ஜெனரேட் செய்யும்.. இந்த மின்சாரம், விண்கலன்களின் டேடா தரவுகளுக்கு உதவும். இதில் அதி நவீன ஆன்போர்டு கம்ப்யூட்டர் (OBC) ஒன்றும் உள்ளது.
விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்க
பிஎஸ் எல்.சிவி 60 ராக்கெட்டை பொறுத்தவரை ராக்கெட்டின் உயரம் 44.5 மீட்டர் ஆகும். ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரண்டு விண்கலன்களும் பூமியில் இருந்து 476 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும்.
தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணைய செய்வதற்கான இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது.
நேரலையில் பார்க்கலாம்
இன்று இரவு 10.00.15 (வினாடிகள்) மணிக்கு பி.எஸ்.எல்.வி. -சி 60 ராக்கெட் ஸ்பேடெக்ஸ் மற்றும் பேலோட்ஸ்களுடன் விண்ணில் பாய்கிறது. ஸ்பேடெக்ஸ் திட்டம் என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான முன்னோடி பரிசோதனை திட்டமாகும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான முக்கியமான டெக்னாலஜி மற்றும் செயற்கைகோள் சேவை திட்டங்களுக்கு முக்கியத்துவமானது. இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் பாயும் இந்த ராக்கெட் ஏவுவதற்கான நேரலையை இரவு 9.30 மணியில் இருந்து இந்த லிங்கில் காணலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications