தெறிக்கவிட்ட தெலுங்கானா.. அரண்டுபோன அதிமுக.. மொத்த கருத்துக் கணிப்பிலும் தொக்கா சிக்குனது இதுதான்!
ஹைதராபாத்: தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் சரி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் சரி, காங்கிரஸ் கட்சியே தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என்று உறுதியாக சொல்லப்பட்டுள்ளது.. இது கேசிஆருக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளதோ, அதைவிட அதிகமாகவே பாஜகவை அதிர வைத்து வருகிறது.
ஹாட்ரிக் வெற்றியை எட்டிப்பறிக்கும் முனைப்புடன் களமிறங்கினார் கேசிஆர்.. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பேயே, 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தன்னுடைய பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார் சந்திரசேகர ராவ்..
பாஜக: ஆனால், பாரத் ராஷ்டிர சமிதியை எப்படியாவது இந்த முறை தோற்கடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன்தான், காங்கிரஸும், பாஜகவும் தங்கள் வியூகங்களுடன் தேர்தலை சந்தித்தன. இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி, காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியிருந்தன. இதை கருத்து கணிப்பை பார்த்து, கேசிஆர் தரப்பு மிரண்டு போனது.. பாஜகவோ உறைந்து போனது..

இந்நிலையில்தான், நேற்றைய தினம் வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது.. மாலை 6 மணிக்கு பிறகு, தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக துவங்கின..
கணிப்புகள்: JAN KI BHAAT, ARRAA, Axis My India, Republic-MATRIZE, இந்தியா டிவி-சிஎன்எக்ஸ், PTS (பிடிஎஸ்), POLSTRAT, போன்ற முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்த கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருக்கின்றன.
இந்த முடிவுகளை பார்த்து, பாஜக மிகுந்த அதிர்ச்சியிலும், கவலையிலும் இருந்து வருகிறது. எங்கே சறுக்கியது பாஜக? எங்கே சறுக்கினார் கேசிஆர்? தெலுங்கானாவில் இரு தரப்பு தலைவர்களுக்கும் மேற்கொண்ட பிரச்சாரங்கள் கை கொடுக்கவில்லையா? என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.
முதல் காரணம்: கேசிஆர் மற்றும் பாஜகவுக்குள் மறைமுகமான உறவு இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.. "நாம் எல்லோரும் சேர்ந்து பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கேசிஆர் பலமுறை பேசினாலும்கூட, அவரது பேச்சை தெலுங்கானா மக்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..
காரணம், பாஜகவுக்கு எதிராகு எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கும் "இந்தியா' கூட்டணியில் கேசிஆர் இணையாமல் ஒதுங்கி கொண்டது. இதுதான், பாஜக + கேசிஆர் மீதான நம்பகத்தன்மை குலைய முதல் காரணமாகிவிட்டது.
பாஜகவை பொறுத்தவரை, மிஷன் சௌத் திட்டத்தில், தெலுங்கானாவை டாப் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது.. அந்தவகையில், 2 விதமான நம்பிக்கையில் தெலுங்கானாவில் களமிறங்கியது.. ஒன்று, ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த பிரதான வெற்றி, அதுவும், பிஆர்எஸ் கட்சிக்கு சரிசமமாக கிடைத்த வாக்குகளை வைத்தே, தன்னுடைய பிரச்சாரத்தை விரிவுபடுத்தியது..
இரண்டாவது காரணம்: "காங்கிரஸின் பொய் வாக்குறுதிகளை கண்டு தெலங்கானா மக்கள் ஏமாந்துவிட வேண்டாம்" என்று கர்நாடகாவிலிருந்து கொளுத்தி போட்டார் எடியூரப்பா.. அதாவது, ஆளும் கேசிஆரை விட்டுவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மீதே பாஜகவின் மொத்த குறியும் விழுந்தது, கேசிஆர் + பாஜக மீதான நம்பகத்தன்மையை மேலும் குலைத்துவிட்டது என்கிறார்கள்.
மூன்றாவது காரணம்: கேசிஆரின் மகள் கவிதா உள்ளிட்ட பிஆர்எஸ் தலைவர்கள் சிலர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கினார்கள். இதன்மூலம் தன்னை ஊழலற்ற கட்சியாக காட்டிக்கொள்ளவும் பாஜக கணக்கு போட்டது.. ஆனாலும், கேசிஆரின் மகள் கவிதா கைது செய்யப்படாமல் விட்டுவிட்டது, பாஜக, பிஆர்எஸ் கட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குலைத்துவிட்டது.
பாஜக - கேசிஆர் இருவருக்கும் மறைமுக உறவு இருப்பதை, இரு கட்சிகளுமே தெளிவுபடுத்தவில்லை.. இத்தனைக்கும் பிரதமர் முதல் அமித்ஷா வரை, நேரடியாகவே வந்து மாறி மாறி பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.. பல்வேறு இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.. அத்தனையும் இன்று பலன் தரவில்லை என்பதே உண்மை.
இதைத்தான் ஒருமுறை ராகுல் பேசும்போது சொன்னார்.. "பாஜக, பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. கேசிஆர் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜிஎஸ்டி உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆதரவு தருகிறார்.
ஆவேசம்: சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கு பயந்துதான் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏஐஎம்ஐஎம் தேர்தலில் போட்டியிட்டது. இதனால் காங்கிரஸுக்கு நஷ்டம், பாஜகவுக்கு லாபம். அதனால்தான், அந்தக்கட்சி மறைமுகமாக பாஜகவுக்கு உதவி வருகிறது என்று ஆவேசமாக சீறியிருந்தார். இன்றைய கணிப்புகளும் இதைதான் நிரூபிப்பதாக அமைந்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இந்த இடத்தில் காங்கிரஸின் வியூகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை, இந்த யாத்திரையையொட்டி, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது, போன்றவைகளின் தாக்கத்தையும் தெலுங்கானாவில் ஏற்பட்டதை உணரவும் முடிந்தது.. காங்கிரஸின் செல்வாக்கும் தற்போது தெலுங்கானாவில் அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.. அதனால்தான், பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மாஜிக்கள் முதல் எம்எல்ஏக்கள்வரை காங்கிரஸை தேடி வந்து இணைந்தார்கள்.
புது தெம்பு: இந்த தேர்தலின் வெற்றியே, விரைவில் நடக்க போகும் எம்பி தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் உள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் தந்து வருகிறது. புது தெம்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக + பிஆர்எஸ் போன்றேதான், நம்முடைய தமிழகத்திலும் நிலைமை உள்ளது.. பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்ட பிறகும்கூட, அதிமுக மீதான நம்பிக்கை கூடவில்லை.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்கான அரசியல் ஸ்டண்ட் என்றே திமுக தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஜவாஹிருல்லா: "கூட்டணி முறிவு என்பது, அண்ணாமலையை பதவி நீக்கம் செய்து, தங்களுக்கு தங்களுக்கு இணக்கமான ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கான அதிமுகவின் தந்திரம் இது.. பாஜகவுடனான தொடர்பை நிரந்தரமாக தண்டிக்க அதிமுகவுக்கோ, அதன் தலைமைக்கோ தைரியம் கிடையாது" என்று அடித்து சொல்லி கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா... திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டுக்களை, அதிமுக பக்கம் கொண்டுவரவே, இந்த அரசியல் நாடகம் என்கிறது கூட்டணி கட்சிகள்.
ஆக, எந்த ஒரு கட்சியுமே, வெகுஜன மக்களின் பக்கம் நின்று, அம்மக்களின் நலனுக்காகவே பாடுபட்டு, அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடித்தால் மட்டுமே, மக்களின் ஆதரவை முழுமையாக பெறும் என்பதற்கு, இந்த தெலுங்கானா தேர்தல் ஒரு உதாரணமாக விளங்கி கொண்டிருக்கிறது.. இது தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, தேசிய அரசியலுக்கும் பொருந்தும் உண்மையாகும்..!
-
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications