ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு.. பாஜகவில் இணைகிறாரா தெலுங்கு நடிகர் நிதின்? அரசியல் பேசியதாக ட்வீட்
ஐதராபாத்: தெலுங்கானா சென்ற பாஜக தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா பிரபல தெலுங்கு நடிகர் நிதினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளை இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அத்துடன் தெலுங்கானா மாநிலத் தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக தெலுங்கானாவுக்கு சென்று இருக்கிறார்.

நிதின் ஜே.பி.நட்டா சந்திப்பு
அப்போது அவர் தெலுங்கு நடிகர் நிதின் குமார் ரெட்டியை சந்தித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜே.பி.நட்டா, "பிரபல தெலுங்கு நடிகர் நிதினை தெலுங்கானாவில் சந்தித்தேன். அரசியல், சமூகம், கலாச்சார பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசித்தோம். தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அவர் தெரிவித்தார். நான் அவரை வாழ்த்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் இணைகிறாரா?
இந்த சந்திப்பின்போது நிதினுக்கு பொன்னாடை அணிவித்த ஜே.பி.நட்டா மலர்கொத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார். நடிகர் நிதின் ஜே.பி.நட்டாவுக்கு பொன்னாடை அணிவித்து திருப்பதி கோயில் சிலையை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். நிதின் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் நேற்று வெளியான நிலையில் இந்த சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

புதிய திரைப்படம்
நிதின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் மசேர்ல நியூஜகர்வகம் திரைப்படத்தில், அஞ்சலியுடன் இவர் நடனமாடி இருக்கும் "சின்னதோ" என்ற பாடல் வெளியாகி பல மொழிகளிலும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரை ஜே.பி.நட்டா சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆர் அமித்ஷா சந்திப்பு
ஐதராபாத்தில் சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை 22 ஆம் தேதி நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரை கட்சியில் இணையுமாறு அமித்ஷா கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஜூனியர் என்.டி.ஆர். அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications