ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுபான ஊழல்:தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவிடம் 7 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை..அடுத்து கைது?

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கவிதா விடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி, சலுகைகள் வழங்கியது. ஆனால் ஆம் ஆத்மி அரசின் இந்த கொள்கை முடிவில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்பது விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை குற்றச்சாட்டு, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பல்வேறு நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதனால் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Liquor scam: CBI questions KCRs daughter Kavitha

2 சம்பவம்.. மகளை கூட விடலையே.. மோடியை எதிர்க்கும் புதிய 2 சம்பவம்.. மகளை கூட விடலையே.. மோடியை எதிர்க்கும் புதிய

தற்போது அதே பாணியில் தெலுங்கானாவில் கால் வைத்துள்ளது சிபிஐ. தெலுங்கானா மதுபான கொள்கை ஊழலில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.பிக்கு தொடர்பு உள்லது என்ப பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் இதனை கவிதா எம்.பி. மறுத்திருந்தார்.

இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் விசாரணை தொடர்பாக கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் அடிப்படையில், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் கவிதாவின் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். பின்னர் கவிதாவிடம் சுமார் 7 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது கவிதா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கவிதாவிடம் 7 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
In Liquor scam, CBI has questioned Telangana chief minsiter Chandrashekar Rao's daughter Kavitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X