ரோடு டேக்ஸ் ரூ.62 லட்சம்! என்ன பிரயோஜனம்? இந்திய சாலையில் லாம்போர்கினி படும் அவஸ்தையை பாருங்க
ஹைதராபாத்: தெலங்கானாவில் குண்டும் குழியுமான சாலையில், பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆடம்பர கார் ஒன்று தட்டு தடுமாறி செல்லும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய மக்களுக்கு ஆடம்பர கார்கள் மீதான மோகம் கொஞ்சம் அதிகம். அதிலும் குறிப்பாக லாம்போர்கனி கார் என்றால் சொல்லவே வேண்டாம்.. ஆனால் இந்த கார் வெளிநாட்டு கம்பெனியினுடையது என்பதால், இறங்குமதி வரி, சாலை வரி எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். உதாரணத்திற்கு இந்நிறுவனத்தின் Aventador SVJ எனும் மாடலின் விலை ரூ.6.25 கோடியாகும். சாலை வரி மட்டும் ரூ.62 லட்சம் வரும்.

இந்த வகை கார்கள் இந்தியாவில் அதிகம் இருக்கின்றன. வேகத்திற்கும், அசத்தலான டிசைனுக்கும் பெயர் பெற்ற இந்த காரை இந்திய சாலைகளில் ஓட்டுவதுதான் கொஞ்சம் கஷ்டம்.
சாலைகளில் உள்ள பள்ளங்கள், மோசமான பராமரிப்பு மற்றும் சரிசமமாக இல்லாத நெடுஞ்சாலைகள் இந்த காருக்கு சவால் விடுகின்றன. இப்படியான சம்பவம் ஒன்றுதான் தெலங்கானாவில் நடந்திருக்கிறது. லாம்போர்கினியின் Aventador SVJ மாடல் கார் ஒன்று மேடுபள்ளம் நிறைந்த சாலையில் தவழ்ந்து வந்திருக்கிறது. இந்த வீடியோ தெலங்கானாவின் எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
இந்த வீடியோவை பகிர்ந்த ட்விட்டர் பயனர், "பரிதாபம்.. நிச்சயமாக காரின் ஓனர் ரூ.62 லட்சத்தை சாலை வரியாக கட்டியிருப்பார்" என்று கூறியுள்ளார். காரை தொடர்ந்து, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் குண்டும் குழியுமான சாலையில் பயணித்திருக்கின்றன. இந்த வீடியோ குறித்து ட்விட்டர் பயனர்கள் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் சாலையின் ஒப்பந்ததாரரை கடுமையாக திட்டியுள்ளனர். சிலர், காரின் ஓனர் மீது பரிதாபமடைந்துள்ளனர்.
இன்னும் சிலர் கார் ஓனருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு காரை தேர்வு செய்ய வேண்டும். ஆடம்பரமான காரை தேர்வு செய்வதை காட்டிலும், இந்திய சாலைகளுக்கு ஏற்ற காரை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம் என்று அட்வைஸ் செய்துள்ளனர். வேறு சிலரோ, கார் வாங்கிய காசுக்கு ஒரு ரோடு போட்டு, அதன் பின்னர் கார் வாங்கி ஓட்டி இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதேபோன்ற சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? காரை மாற்றுவீர்களா? சாலையை மேம்படுத்த குரல் கொடுப்பீர்களா?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications