"கல்யாணம்னு நடந்தா உன் கூடதான்" செவிலியருடன் பலமுறை உறவு! விஷ ஊசியை எடுத்த நர்ஸ்! கடைசியில் விபரீதம்
ஹைதராபாத்: தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொள்ள போவதை அறிந்த செவிலியர் ஒருவர் மனமுடைந்து விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அந்த காதலனை போலீஸார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், மிர்யாளகுடாவில் உள்ள பொக்கனுந்தலபாடு கிராமத்தை சேர்ந்த மல்லீஸ்வரி (27). ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி பணிக்குச் சென்று வந்தார்.
இவர் கடந்த 4 ஆண்டுகளாக அதே கிராமத்தை சேர்ந்த ஜனா ரெட்டியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் காதலை வளர்க்க பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவர்களது காதல், ஜனா ரெட்டி வீட்டாருக்கு தெரியவந்தது.
எதிர்ப்பு
அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மல்லீஸ்வரியை மருமகளாக ஏற்க ஜனா ரெட்டியின் பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மல்லீஸ்வரி வேதனை அடைந்தார். பின்னர் ஜனா ரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
மல்லீஸ்வரிக்கு இடி
இது மல்லீஸ்வரிக்கு தெரியவந்தது. உடனே ஜனா ரெட்டியிடம் போய் நியாயம் கேட்டுள்ளார். அவரோ தனது தாய், தந்தையின் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாது என கூறிவிட்டாராம். திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட ஜனா ரெட்டி தற்போது இப்படி கூறிவிட்டாரே என்பதை நினைத்து மல்லீஸ்வரி மனமுடைந்தாராம்.
வேறு பெண்ணுடன் திருமணம்
இந்த நிலையில் ஜனா ரெட்டி, மல்லீஸ்வரி குறித்து கவலைப்படாமல் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது மல்லீஸ்வரிக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த செய்தி அவருக்கு தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது.
விஷ ஊசி போட்டு தற்கொலை
இந்த நிலையில் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டதை நினைத்து தினந்தோறும் மல்லீஸ்வரி அழுதுக் கொண்டே இருந்தாராம். தனது பணிகளிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லையாம். இந்த நிலையில் மிகுந்த மன வேதனைக்கும் விரக்திக்கும் சென்ற மல்லீஸ்வரி, ஜனா கெட்டியின் பிரிவை தாங்க முடியாமல் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மல்லீஸ்வரியின் பெற்றோர் புகார்
இதுகுறித்து மல்லீஸ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜனா ரெட்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி சம்பவம்
இதே போல் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரிலும் இது போன்றதொரு சம்பவம் நடந்தது. அந்த ஊரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் என்ற பெயரில் அந்த பெண்ணுடன் பல இடங்களுக்கு சென்று உறவு கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கேட்டதற்கு ராஜேஷ் மறுத்தாராம்.
தற்கொலை முயற்சி
பலமுறை நியாயம் கேட்ட நிலையில் அதை உணராத ராஜேஷ், திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்தாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த பெண்ணை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. தற்கொலை முடிவு ஏற்பட்டால் உடனடியாக மனநல ஆலோசனை மையத்தை அணுகுங்கள்.












Click it and Unblock the Notifications