"நான் குணமாகிட்டேன்.." நெல்லூர் கொரோனா மருந்தை உபயோகித்து வீடியோ போட்டவர்.. திடீர் மரணம்.. அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் கொரோனாவிற்கு மருந்து என்று சொல்லி அளிக்கப்படும் கண் சொட்டு மருந்தை எடுத்துக்கொண்ட நபர் இன்று பலியானார். ஆனந்தையா மருந்து என்று இந்தியா முழுக்க இந்த மருந்து வைரலான நிலையில் இவர் அளித்த சொட்டு மருந்து போட்ட நபர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் இருந்தேன்.. என்னை மருத்துவர்கள் குணப்படுத்தவே முடியாது என்றார்கள்.. நான் இங்கு நேராக நெல்லூர் கிருஷ்ணப்பட்டினம் வந்து ஆனந்தையா கொடுத்த கண் சொட்ட மருந்தை எடுத்துக்கொண்டேன்.

மருந்தை போட்ட சில நிமிடங்களில் குணமாகிவிட்டேன், மிகவும் நன்றாக மூச்சு விடுகிறேன், என்று ஆந்திராவை சேர்ந்த என் கொத்தையா என்ற ஆசிரியர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இவரின் வீடியோ இணையம் முழுக்க வைரலானது.

வைரல்

வைரல்

ஆனந்தையாவிடம் சிகிச்சை பெற்ற பலர் இப்படி கொரோனா காரணமாக குணமடைந்ததாக என் கொத்தையா அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். இவர் அந்த வீடியோவில் மருந்தின் பலனை விவரித்த விதம் இணையம் முழுக்க வைரலானது. அதன்பின் பலரும் இந்த மருந்தை வாங்க நெல்லூரில் குவிந்தனர். ஆந்திர பிரதேச அரசே இந்த மருந்தை மத்திய ஆயுர்வேத ஆய்வு மையத்திற்கு சோதனைக்கு அனுப்பும் அளவிற்கு இந்த மருந்து பிரபலம் அடைந்தது.

மருந்து

மருந்து

போனிகி ஆனந்தையா என்ற வைத்தியர் மூலம் நெல்லூரில் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. வாய் வழியாக சாப்பிடும் உருண்டை போன்ற மருந்து, அதன்பின் கண்களில் ஊற்றக்கூடிய சொட்டு மருந்து வகை கொரோனா மருந்து என்று சில மருந்துகளை இவர் விற்பனை செய்து வருகிறார்.

மோசம்

மோசம்

இந்த நிலையில் இந்த கண் சொட்டு மருந்தை எடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக கூறிய என் கொத்தையா என்ற ஆசிரியர், கடந்த வெள்ளிக்கிழமை உடல் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெல்லூரில் ஆனந்தையாவிடம் சிகிச்சை பெற்ற இவர் மீண்டும் உடல்நலம் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

இவரின் ஆக்சிஜன் லெவல் குறைந்து, மூச்சு விட கடுமையாக சிரமப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கொத்தையா இன்று பலியானார். உடல்நிலை மோசமாகி, கூடுதல் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு கொத்தையா பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெல்லூரில் கண் மருந்து எடுத்து குணமாகிவிட்டேன் என்று கூறிய சில நாட்களில் கொத்தையா பலியாகி உள்ளார்.

கண் மருந்து

கண் மருந்து

இவருக்கு தேன், கத்திரிக்கையின் ஒரு வகை சாறு, மிளகு கலந்த மருந்து கண்ணில் சொட்டு மருந்தாக போடப்பட்டது. இதை போட்டு சில நாட்களில் கொத்தையா கொரோனா குணமாகாமல் பலியாகி உள்ளார். இன்றுதான் நெல்லூரில் போனிகி ஆனந்தையா வழங்கும் கொரோனா மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவரின் கண் மருந்தை தவிர மற்ற மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

இதில் வேடிக்கையான விஷயம் வைத்தியர் போனிகி ஆனந்தையாவின் குழுவில் உள்ளவர்களுக்கே தற்போது கொரோனா ஏற்பட்டுள்ளது. அவரின் குழுவில் உள்ள 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அவரின் கிராமத்தில் உள்ள 20 பேருக்கு கொரோனா சோதனை செய்ததில் அவரின் குழுவிலேயே 3 பேருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+