ஹைதராபாத்தில் சார்மினார் அருகே மிக மோசமான தீ விபத்து! 17 பேர் உடல் கருகி உயிரிழப்பு, பலர் படுகாயம்
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சார்மினார் அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மிக மோசமான தீ விபத்து (Charminar fire accident) ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் சார்மினார் அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக முக்கிய இடமாக உள்ள சார்மினாருக்கு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் சார்மினாரை சுற்றி நூற்றுக்கணக்கான கடைகளும் அமைந்துள்ளன.

ஹைதராபாத் தீ விபத்து
மேலும், அது பல ஆண்டுகளுக்கு முன்பே டெவலப் ஆன பகுதி என்பதால் அங்குத் தெருக்கள் குறுகலானதாகவும் மிகவும் மக்கள் நெருக்கடி அதிகமாகவும் இருக்கும். இதற்கிடையே சார்மினார் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 17 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை 6.30 மணியளவில் இந்த தீவிபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.. தீ விபத்திற்குக் காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறை அதிகாரிகள்
இது தொடர்பாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்குக் காலை 6.30- 6.45 போல தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீ பெரிதாக இருந்ததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்களை அழைத்தோம். இதுவரை 11 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்களை விரைவாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளோம்" என்றார்.
தெலுங்கானா முதல்வர்
இந்த தீ விபத்தில் உயிரிழந்தோருக்குத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்ட ரேவந்த் ரெட்டி, காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய அமைச்சரும் ஹைதராபாத்தை சேர்ந்தவருமான ஜி கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குல்சார் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள தங்கள் கடையின் மேல் பகுதியில் வசித்து வந்தவர்கள் என ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
ஜி கிஷன் ரெட்டி
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தேன். இது போன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை.. ஆனால் நகரின் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளை வலுப்படுத்த வேண்டும். தீவிபத்து எனத் தகவல் கிடைத்து முதலில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் தொடக்கத்தில் சரியான உபகரணங்கள் இல்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர். வரும் நாட்களில் நமது தீயணைப்பு வீரர்களுக்குச் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொடுக்க வேண்டும்" என்றார்.
தீவிபத்து நடந்த பகுதியில் ஏராளமான நகைக் கடைகள் உள்ளன. இது சார்மினாருக்கு மிக அருகில் அமைந்துள்ளது.. இந்த பகுதியில் இயங்கி வரும் பல கடைகள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையானவை. மேலும், அவை மிக நெருக்கமாக அமைந்திருக்கும். இதன் காரணமாகவே பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது.
பிரதமர் மோடி
இந்த தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications